"கோத்தாபயவை கைதுசெய்தால், சிங்கள மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்"
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவை கைது செய்தால் தென்னிலங்கையில் பாரிய மக்கள் போராட்டம் நடத்த பொது எதிரணி தீர்மானித்துள்ளது. இரகசிய சந்திப்புகள், மக்கள் கூட்டங்களை நடத்த ஏற்பாடுகளும் மும்முரமாக இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை கைது செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் கோத்தா ஆதரவு அமைப்புகள், அரசியல் கட்சிகள், பொது எதிரணி ஆகிய இணைந்து மறைமுக சந்திப்புகளையும், பல்வேறு ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றன. கோத்தபாய ராஜபக் ஷவை கைது செய்தால் அடுத்ததாக தாம் எடுக்கும் நகர்வுகள் குறி த்து ஆராய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் நேற்று முன்தினம் இரவு கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் பொது எதிரணியினர் விசேட சந்திப்பொன்றை முன்னெடுத்தனர். இந்த சந்திப் பின் போது சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக தென்னிலங்கையில் மக்கள் கூட்டங்களை ஒன்றிணைத்து பாரிய அளவில் போராட்டங்களை நடத்தவும், கொழும்பிலும் வேறு சில பகுதிகளிலும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பொது எதிரணியின் உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் இது குறித்து வினவியபோது அவர் கூறியதாவது,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அவரது சகாக்களுக்கும் எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு வரும் நிலை யில் அவை குறித்து நாம் மக்களிடம் உண்மைகளை வெளிப்படுத்தி வரும் நிலையிலேயே இன்று எமக்கு எதிராக இவ்வாறான பழிவாங்கல் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனக்கு எதிராகவும் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு என்னையும் கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் இந்த நாட்டை காப்பாற்றிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவையும் கைது செய்ய பாரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவரை கைது செய்தால் இந்த நாட்டில் தென்னிலங்கையில் குழப்பங்கள் ஏற்படும். அவ்வாறான நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற காரணிகளை ஆழமாக கலந்துரையாடினோம். அவரை கைதுசெய்வது உறுதியாக தெரிய வந்தால் அதற்கு எதிராக நாட்டின் சிங்கள மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். எனவே மக்களை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். தெற் கின் பலம் என்னவென்பதை இந்த அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும். அதற்கான சரியான வாய்ப்புக்காக நாம் காத்தி ருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் இந்த நாட்டை நேசித்த, இந்த நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நபர்களை தண்டிக்க ஒருபோதும் மக்கள் இடமளிக்கப் போவதில்லை. ஆகவே இந்த விடயங்கள் குறித்து கூட்டத்தில் ஆராய்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
மக்கள் பணத்தை கொல்லையிட்டதை தவிர என்ன சேவை செய்தார் இவர்
ReplyDeleteஇப்படியானவர்களதான் தற்போதய அரசியல் தலைவர்கள் மக்களே உங்களின் வாழ்கையை நாசத்தில் மீண்டும் உண்டாக்காதீர்கள் களவெடுத்த கோத்தபாய நாட்டை நேசிப்பவர்,நாட்டை காப்பாற்றிவர் என்று கருதி அவரை கைதிசெய்யவேண்டாமாம! அப்ப ஏண்டா நாட்டை காப்பாற்ற தன் உயிரை பழிகுடுக்க தயாராகி தன் ரனகளத்தில் போராடிய அந்த உத்தமன் சரத் பொன்சேக்காவை அனியாயமாக சிறையில் அடைத்து வேதனை செய்தீர்கள் தற்போமது நீ சொல்லும் மக்கள் புரட்சி எங்கேடா இருந்த்தது? மேலும் கோட்டால் நீண்ட விசாரனை புலனாய்வின் வெளியாக தீர்பை சில குடிகார மக்கள் எப்படிடா எதிர்பார்கள் அப்படியானால் ஏன் இந்த உயர் நீதிமன்றம் ஏன் அதில் உள்ளரவர்களுக்கு சம்பளம் என்ற பெயரில் மக்களின் பணங்கள் வீனாக்கப்படுகின்றன!
ReplyDelete