Header Ads



பலஸ்தீன மக்களின் அபிலாசைகளை, பூர்த்திசெய்து கொள்ள பூரண ஆதரவளிக்கப்படும்

பலஸ்தீன மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்து கொள்ள பூரண ஆதரவளிக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு லக்ஸ்மன் கதிர்காமர் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் பலஸ்தீன ஒத்துழைப்பு தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் பயங்கரவாத யுத்தம் காணப்பட்ட காலத்தில் கூட இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு பலஸ்தீனம் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.

பலஸ்தீன மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்து கொள்ள இலங்கை மக்கள் நீண்ட காலமாக ஆதரவளித்து வருகின்றனர்.

இலங்கைக்கு பலஸ்தீனம் வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றி பாராட்டுகின்றோம்.

சேதன விவசாய உற்பத்திகளை மேம்படுத்துவதற்கு பலஸ்தீனம் வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.