Header Ads



யாழ் முஸ்லிம்களின், துயர் துடைப்பாரா ரிஷாத்..?

-யாழ்ப்பாணத்திலிருந்து அபூபக்கர்-

யாழ்ப்பாண முஸ்லிம்கள்  அவர்களது தாயகப் பூமியில் இருந்து வெளியேற்றப் பட்டு கடந்த ஒக்ட்டோபர் 30 ஆம் நாள் 27 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது.  வெளியேற்றப் பட்டபோது  யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற அம்முஸ்லிம்களுக்கு 2 மணி நேர அவகாசமே வழங்கப் பட்டதுடன் அரை மணி நேரத்திலேயே புலிகளின் ஆயுதம் தாங்கிய அணிகள் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து பணம் நகை என்பவற்றை பறிக்கத் தொடங்கியிருந்தனர்.  அவ்வாறு வெளியேறியவர்கள் தமது ஊரின் எல்லைகளை அடைந்த போது ஐந்து சந்தி, ஆஸாத் வீதி, ஜின்னா வீதி போன்றவற்றில் வைத்து உடல் பரிசோதனை செய்யப் பட்டு பணம் நகை உடைகள் சிறுவர்களுக்கான பால்மாக்கள் என்பன கூட பறிக்கப் பட்டு குடும்பம் ஒன்று தலா 200 ரூபாவுடனேயே கொண்டுசெல்ல அனுமதிக்கப் பட்டனர்.

இவ்வாறு  யாழ்ப்பாண முஸ்லிம்களிடம்  இருந்து 2000 கிலோ தங்க ஆபரணங்கள், 200 மில்லியனுக்கு  மேற்பட்ட பணம், 30 மில்லியனுக்கு மேற்பட்ட உடைகள் உட்பட பலகோடிகள் பெறுமதியான வாகனங்கள், கதிரைகள், கட்டில்கள்,  மேசைகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் அழுத்திகள், வாயு அடுப்புகள், கேஸ் சிலிண்டர்கள், ஏனைய மின் சாதனப் பொருட்கள் உட்பட அனைத்து அசையும் பொருட்களும் புலிகளின் ஆயுதக் குழுவால் கொள்ளையடிக்கப் பட்டன. இவற்றின் பெறுமதி பல மில்லியன் ரூபாய்கள் ஆகும்.

இதற்கான நஷ்ட ஈடுகள் எதுவும் கடந்த 27 வருடங்களில் வழங்கப் படவில்லை. இவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்ற மனிதாபிமான பிரேரனைகள் வேண்டுகோள்கள் அல்லது முயற்சிகள்  எதுவும் வடமாகாண சபையாலோ அல்லது தமிழ் அரசியல் வாதிகளாலோ அல்லது யாழ் மாவட்ட  செயலகம் அல்லது பிரதேச சபையோ இது வரை முன்வைக்கவில்லை.

2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணம் திரும்பிய முஸ்லிம்கள் தமது  வீடுகளின் கதவுகள் நிலைகள் ஜன்னல்கள் எல்லாம் உடைத்தெடுக்கப் பட்டிருந்ததையும் அதிகமான வீடுகளில் சுவர் கற்கள் கூட உடைத்து எடுக்கப் பட்டிருந்ததுடன்  மலசல குழிகள் கூட உடைக்கப் பட்டு அங்கு தங்கம் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதா என சோதிக்கப் பட்டிருந்ததை காண முடிந்தது.  இந்த சொத்துக்களுக்கான ஆதண வரிகள் யாழ் மாநகர சபைக்கு 1990 வரை முறையே செலுத்தப் பட்டு வந்த போதிலும்  அந்த மாநகர சபி இந்த சொத்துக்களை பாதுகாக்க தவறிவிட்டது.

அவர்கள் தான் பாதுகாக்கவில்லை என்றால் யாழ் கச்சேரியும் அந்த சொத்துக்களை பாதுகாக்க தவறிவிட்டது. இதனால் முஸ்லிம்களின் பிரதேசத்திலுள்ள வீடுகள் எல்லாம் அழிவடைந்து காடுகள் வளர்ந்து ஒரு சூனியப் பிரதேசமாக மாறியிருந்தது.

இன்நிலையில் இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் வழங்கப் பட்ட 50000 வீடுகளில் 200 வீடுகளே யாழ் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. அதுவும் 2010 ஆம் ஆண்டிலிருந்து விண்ணப்பித்தவர்களை பல வருடங்கள் அலைய வைத்து 2016 ஆம் ஆண்டே முதல் முதலில் வீடுகள் வழங்கப் பட்டது. அவ்வாறு 89 வீடுகளே வழங்கப் பட்டதாக யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.  மேலும் கடுமையான போராட்டங்கள் பேச்சுவார்த்தைகள் அழுத்தங்களின் பின்னர் இன்னும் சில வீடுகள் வழங்கப் பட்டன, 450 குடும்பங்கள் 2011 கணக்கீட்டின் படி மீளக் குடியேறியிருந்தும் 2016 வரை வீடமைப்பு திட்டங்களை வழங்காமல் இழுத்தடிப்பு செய்தமைக்கு மாவட்ட செயலகம் என்ன காரணங்களைச் சொல்லப் போகின்றதோ தெரியவில்லை.

இன்நிலையில் மீள்குடியேற்றச் செயலணி தற்போது ஒதுக்கியுள்ள   200 வீடுகளையும் பெறமுடியாத நிபந்தனைகள் போடப்பட்டுள்ளன.  27 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் ஓரிரண்டு மாதங்களில் மீள்குடியேறுவது என்பது நடைமுறைச் சாத்தியமற்ற ஒரு நிபந்தனை.  இடம் பெயர்ந்து சென்றவர்கள் ஆரம்பத்தில் வீதிகளிலும் காடுகளிலும் தூங்கிய போதும் இன்றும் அப்படி வாழ்ந்தால் தான் மீள்குடியேற்ற உதவி வழங்கப் படும் என்பது இன்னொரு நிபந்தனை. இப்படி அவர்களே துரத்திவிட்டு கொள்ளையடித்து மீளக் குடியேற முடியாதபடி நிபந்தனைகளையும் போட்டிருப்பது மனித விழுமியங்களுக்கு அப்பாற்பட்ட செயல்களாகும்.

தற்போது யாழ்ப்பாணத்தில் தேசிய மீலாத் விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஜனாதிபதி அவர்களும் இவ்விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்கள்.  இன்னும் பல அமைச்சர்களும் பிரதிநிதிகளும் தூதுவர்களும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் வாதிகளும் இவ்விழாவில் கலந்துகொள்ளவுள்ள நிலையில் அழிவடைந்துள்ள ஒரு பிரதேசத்தில் இவ்விழாவை நடத்துவதை விட புனரமைக்கப் பட்டு அழகு படுத்தப் பட்ட  சோனகதெருவில் அந்த விழாவை நடத்துவது தான்  சிறப்பாக இருக்கும்.

அமைச்சர் ரிஷாத் ஆகிய தாங்கள் முன்னாள் மீள் குடியேற்ற அமைச்சராக இருந்து தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களை மீளக் குடியேற்றியது பாராட்டக் கூடியது. தற்போது தாங்கள் மீள்குடியேற்றச் செயலணியில் முக்கிய பதவி வகிக்கின்றீர்கள்.  மேலும் மீலாத் விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்தவேண்டுமென்று கோரிக்கையையும் எமது மக்கள் சார்பாக முன்வைத்து இருந்தீர்கள்.

இன்நிலையில் மீள்குடியேற்றச் செயலணியால் யாழ் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப் பட்ட 200 வீடுகளுக்கான  நிதியையும் மீலாத் விழாவுக்கான புனரமைப்பு நிதியாக ஆக்கி  உடைக்கப் பட்ட  வீடுகளுக்கான நஷ்ட ஈடாக வழங்கினால் அந்த 200 வீடுகளினதும் புனரமைப்பு வேலைகளையும் உடனடியாக ஆரம்பிக்க முடியும். எனவே யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீது அக்கரை கொண்ட அரசாங்க நிதியில் மட்டுமல்ல  தனிப்பட்ட நிதியிலும்  இந்த வீடுகளைக்  கட்டிக் கொடுக்கும் ஆற்றல் தங்களுக்கு உண்டு என்பதை நாங்கள் அறிவோம்.  

எனவே யாழ் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப் பட்ட 200 வீடுகளுக்கான  நிதியையும் மீலாத் விழாவுக்கான புனரமைப்பு நிதியாக ஆக்கி  வீடுகள் கட்டப் பட வேண்டும் என்ற ஒரெ ஒரு நிபந்தனையுடன்  உடைக்கப் பட்ட  வீடுகளுக்கான நஷ்ட ஈடாக அந்த நிதியை  ஆக்கும் படி மீலாத் விழாவை முன்னிட்டு ஜனாதிபதியிடமும் கௌரவ சுவாமிநாதன் அவரகளிடமும் கோரிக்கை விடுக்குமாறு யாழ்ப்பாண முஸ்லிம்கள் சார்பில் தங்களிடம் தாழ்மையான கோரிக்கையை முன்வைக்கின்ன்றோம்.

3 comments:

  1. தற்போது வெள்ளவத்தை appartments களில் வசிக்கும் தமிழர்களில் 75% யாழிலிருந்து யுத்தினால் 90களில் வெளியேற்றபட்டவர்கள் தான். (என் பெற்றோர்கள் உட்பட) இதில் பலருக்கு சொந்த வீடுகள்.

    இவர்களும் யாழ்ப்பாணத்தில் free வீடுகள் கேட்கலாமா?
    Please advise.

    ReplyDelete
    Replies
    1. அந்தோனி!
      உன்னையும் உனது குடும்பத்தையும் யாராவது 3 மணிநேரத்திற்குள் உடுத்த துணிகளோடும் 300 ரூபாவுக்குட்பட்ட பணத்தோடும் மட்டுமே வெளியேற வேண்டும் என்று துரத்தினார்களா?
      ஆனால் நீங்களோ ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் தஞ்சம் கோருவதற்காக வெளியறியவர்கள்.
      ஏன்டா உங்களது பிரிவினைவாதத்தை அகதிகளின் கண்ணீர் வாழ்க்கையிலும் பயன்படுத்துகிறீர்கள்.

      Delete
  2. இந்த 3 மணி நேரமும், 300 ரூபாவும் கூட கிடைக்காமல் வீட்டை/ ஊரை விட்டு ஒடிய/விரட்டப்பட்ட தமிழ் அகதிகள் பல லட்சம், பல மடங்கு.

    ReplyDelete

Powered by Blogger.