ரணிலை தப்பவிடக் கூடாது - ஜே.வி.பி. வலியுறுத்து
மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி. கட்சி தலைமையகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய கட்சியின் பிரசார செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இந்த ஊடகச் சந்திப்பில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்;
மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் நடந்துள்ள நிலையில், அரசாங்கம் அதனை மூடி மறைக்க முயற்சிக்கின்றது. இதில் பிணை முறி விவகாரம் முக்கியமானது. ஊழல் விடயத்தில் முதலில் சாட்சி வழங்க வேண்டியவர் பிரதமரே. அவரே விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்.
ஆகவே அவரிடம் முதலில் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். பிரதமர் என்ற காரணத்தைக் காட்டி சட்டத்தில் இருந்து தப்பிக்க இயலாது. ஆகவே பிரதமரை முதலில் விசாரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Post a Comment