Header Ads



பேஸ்புக் காதலருக்கு கிடைத்த அவமானம் - மாத்தறையில் அதிர்ச்சி

மாத்தறையில் யுவதி ஒருவரை சந்திப்பதற்காக சென்ற இளைஞர் அதிர்ச்சி சம்பவம் ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளார்.

பேஸ்புக் ஊடாக அறிமுகமாகிய யுவதி சந்திப்பதற்காக மாத்தறை கடற்கரைக்கு சென்ற 23 வயதுடைய இளைஞர் ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.

பேஸ்புக் ஊடாக அறிமுகமாகி இருவரும் வைபர் ஊடாக தங்கள் நட்பை வளர்த்துள்ளனர்.

நாளடைவில் குறித்த இளைஞனை மாத்தறை கடற்கரைக்கு வருமாறு யுவதி அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட இளைஞன் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

தான் இதுவரை பார்த்திராத யுவதியை நேரில் பார்க்கும் மிகவும் ஆர்வத்துடன் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலை ஊடாக மாத்தறை நகரத்திற்கு வந்த இளைஞனை முச்சக்கர வண்டி ஒன்றுக்கு பின்னால் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது வலுக்கட்டாயமாக குறித்து இளைஞனை, முச்சக்கர வண்டியில் ஏற்றிய குழுவினர், அவரை தெவுன்தர துறைமுக பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு வைத்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் பெறுமதியான கையடக்க தொலைபேசியை பறித்து கொண்டு இளைஞனை வீதியில் விட்டுச் சென்றுள்ளனர்.

பேஸ்புக் காதலினால் இவ்வாறு பலர் தொடர்ந்து ஏமாற்றப்படுவதாக இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இளைஞர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.