தாஜுதீன் விவகாரத்தில் ஏன், உண்மைகளை மூடிமறைக்கின்றனர்..? மங்கள
நல்லாட்சி அரசாங்கத்தில் ராஜபக் ஷக்களின் குற்றங்களை மூடிமறைக்கவேண்டிய தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒருபோதுமில்லை. ராஜபக் ஷக்கள் குறித்த வழக்குகளை முன்னெடுக்கும்போது ஒருசிலர் தடுப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். பிணைமுறி விவகாரத்தில் அக்கறை காட்டும் நபர்கள் ஏன் தாஜுதீன் விவகாரத்தில் உண்மைகளை மூடிமறைக்கின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பினர்.
மாத்தறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது.
இன்று நாட்டில் தற்போது நடைமுறையில் செயற்படுத்தப்பட்டுவரும் சட்டம் ராஜபக் ஷ குடும்பத்தினருக்கு பொருந்தாதா? அவர்கள் விடயத்தில் சட்டம் செயற்படாத என்ற சந்தேகம் எனக்குள் எழுகின்றது. ஏனெனில் அவர்கள் தொடர்புபட்ட முக்கியமான வழக்குகள் அனைத்தும் விசாரணைக்காக முன்னெடுக்கப்பட்டாலும் எங்காவது ஒரு இடத்தில் அவை தடைப்படுகின்றது. அரசியல் காரணிகளுக்காக அவர்களை பாதுகாக்கும் சிலர் அவ்வாறு செய்வதனால் மக்கள் எம்மையும், பொலிஸ் திணைக்களத்தையும் திட்டித் தீர்க்கின்றனர். எவ்வாறு இருப்பினும் இந்த அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட ராஜபக் ஷ குடும்பத்தை காப்பாற்றவோ, கொலைகாரர்களை, கொள்ளைக்காரர்களை பாதுகாக்கவோ அவர்கள் தொடர்பிலான குற்றங்களை மூடிமறைக்கவோ ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவித தேவையும் இல்லை.
மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் காட்டிய அக்கறையில் பத்து வீதத்தையேனும் ராஜபக் ஷக்களின் குற்றங்களை கண்டறிய முன்வரவில்லை என்பதே உண்மையாகும். அவர்களின் குற்றங்களையும் அவ்வாறே விசாரித்திருந்தால் அவர்கள் செய்த மிகப்பெரிய ஊழல், மோசடிகள், கொலை என்பனவும் கண்டறியப்பட்டிருக்கவும் முடிந்திருக்கும். மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் எமது அரசாங்கத்தின் அமைச்சர்கள் யார் யாருக்கோ தொலைபேசி அழைப்புகளை எடுத்ததாகவும் கூறி வருகின்றனர். எமது அரசாங்கத்தின் மீது பழி சுமத்தவும் ,சம்பவங்களை திசைதிருப்பவும் இவ்வாறான கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த விவகாரத்தில் அக்கறையுடன் செயற்படும் நபர்களுக்கு ஏன் தாஜுதீன் கொலை சம்பவத்தில் அன்றைய இரவு எத்தனை தொலைபேசி அழைப்புகள் பதிவாகியுள்ளது என்பது குறித்தும் ,யார் யார் தொடர்புபட்டுள்ளனர் என்பது குறித்தும் நாட்டு மக்கள் மத்தியில் தெரிவிக்கவில்லை. உண்மைகளை சிலர் மறைத்து விட்டனர்.
யார் எதற்காக இவ்வாறு செய்கின்றனர் என்று தெரியவில்லை. நல்லாட்சி காலத் திலும் முன்னைய குற்றவாளிகளின் ஆவி கள் நிறுவனங்களில் இருந்து இவற்றை மறைத்து வருகின்றதோ தெரியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் மாத்திரம் இவ்வாறு தடைகள் ஏற்பட்டு வருகின்றன. இதையும் அனைவரும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இப்படி இத சொல்ல வெட்கம் இல்லையா? இந்த அரசாங்கத்தில் நீங்களும் ஒரு அமைச்சர் தானே.. நீதி அமைச்சரும் உங்க ஆள்தானே.. சட்டமாதிபர் திணைக்களம் உங்களின் நீதி அமைச்சரிடம் தானே உள்ளது.. நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு நாடகம் நடத்துகிறீர்கள் என்பது தான் உண்மை..
ReplyDeleteAll are drama... Hi....hi
ReplyDelete