என் முகத்தை காட்டியே, வெற்றி பெற்றேன் - நிஷாந்த முத்துஹெட்டிகம
கடந்த பொதுத் தேர்தலில் தனது முகத்தை காண்பித்து வெற்றிப் பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறினாலும் தான் உட்பட ஏனைய பிரதிநிதிகள் தமது முகங்களை காட்டியே நாடாளுமன்றத்திற்கு தெரிவானதாகவும் பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
அதேபோல் மகிந்த ராஜபக்ச தனது முகத்தை காட்டியே கிராமத்திற்கு மக்கள் மத்திக்கு சென்றார் எனவும் அவர் கூறியுள்ளார்.
காலியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே நிஷாந்த முத்துஹெட்டிகம இதனை குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரியளவில் வெற்றிப் பெற தயாராக இருக்கின்றோம்.
சிலர் கூறுவது போல் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் எந்த எண்ணமும் இல்லை. எப்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.
அரசாங்கம் என்ற வகையில் 50 வீத நன்மை மற்றும் 50 வீத தீமையான பிரதிபலன்களை பெற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் செயற்பட்டு வந்தாலும் எப்போதும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைய போவதில்லை.
அதேபோல் பசில் ராஜபக் இருக்கும் வரையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்கும் இணைய முடியாது எனவும் நிஷாந்த முத்துஹெட்டிகம குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment