மதில் சுவர் இடிந்துவிழுந்து, ஒருவர் வபாத்
கந்தளாயில் நகர் பகுதியில் மதில் சுவரொன்று இடிந்து விழுந்ததால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(10) காலை இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா வில்வெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹபீபுல்லா (32) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடிநீர் குழாய் திருத்தப்பணியில் ஈடுபட்டிருந்தபோது அருகிலிருந்த மதில் சுவர் இடிந்து விழுந்ததினால் இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment