கட்டார் நாட்டவர்களுக்கு, பஹ்ரைன் புதிய கட்டுப்பாடு
பஹ்ரைன் வரும் கட்டார் நாட்டவர்களுக்கு நுழைவு விசா அனுதியை அமுல்படுத்த பஹ்ரைன் அரசு தீர்மானித்துள்ளது.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உடன்பாட்டுக்கு அமைய பஹ்ரைன் மற்றும் கட்டார் உட்பட அந்த அமைப்பில் இருக்கும் ஆறு நாட்டினருக்கும் விசா இன்றி ஏனைய நாடுகளுக்கு செல்ல அனுமதி உள்ளது. பாதுகாப்பை பலப்படுத்தவெனக் கூறியே பஹ்ரைன் மன்னர் இஸ்ஸா அல் கலீபா கடந்த செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.
அண்டை நாடுகளின் நிபந்தனைகளை ஏற்கும் வரை கட்டாரின் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்ஸில் அங்கத்துவத்தை இடைநிறுத்த வேண்டும் என்று பஹ்ரைன் வெளியுறவு அமைச்சு கடந்த திங்கட்கிழமை கூறியது.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளான பஹ்ரைன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியத்துடன் அதன் அங்கத்துவமில்லாத எகிப்து ஆகிய நான்கு நாடுகளும் கடந்த ஜுன் 5 ஆம் திகதி கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டதோடு அந்த நாட்டின் மீது பல கட்டுப்பாடுகளையும் கொண்டுவந்தன. கட்டார் தீவிரவாதத்திற்கு உதவுவதாக இந்த நாடுகள் குற்றம்சாட்டின.
Post a Comment