Header Ads



தேசிய மிருக காட்சிசாலையில், குட்டி ஈன்ற வரிகுதிரை - பார்வையாளர்கள் கண்டுகளிக்க வாய்ப்பு


தெஹிவளை தேசிய மிருக காட்சிசாலையில்  வரி குதிரையொன்று குட்டி ஈன்றுள்ளது. சரணி எனப்படும் வரி குதிரையே இவ்வாறு இன்று குட்டியை ஈன்று எடுத்துள்ளது.

குட்டியை ஈன்ற சரணி எனப்படும் வரி குதிரை இதே மிருக காட்சிசாலையில் பிறந்த ஒரு விலங்காகும்.

இன்று பிறந்த வரி குதிரை குட்டி நல்ல தேகாரோக்கியத்துடன் இருப்பதாக தெஹிவளை தேசிய மிருக காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம திருமதி தம்மிகா மாரசிங்க தெரிவித்தார்.

மிருககாட்சிசாலைக்கு வருகை தரும் பார்வையாளர்கள் தாய் வரி குதிரையையும் அதன் குட்டியையும் கண்டுகளிக்க கூடிய வகையில் திறந்தவெளியில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.