துமிந்தவின் ஐடியா இது...
கிராமத்திற்கான மக்கள் பிரதிநிதியை தெரிவு செய்யும் போது அரசாங்கத்தின் அதிகாரம் இருக்கும் கட்சியின் மூலம் அந்த பிரதிநிதியை தெரிவு செய்தால், கிராமத்திற்கு சேவைகளை செய்து கொள்ள முடியும் என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ராஜாங்கனைய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் உதவிகளை சரியான முறையில் கிராமத்து மக்கள் அனுபவிக்க செய்வது வெட்கமான செயலோ அல்லது கூடாத நடவடிக்கையோ அல்ல.
ஜனவரி மாத இறுதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தெளிவாக கிராமத்திற்கு சேவை செய்யக் கூடிய நபரை தெரிவு செய்ய வேண்டும்.
கிராமத்திற்கு தெரிவு செய்யப்படும் நபர் கிராமத்திற்கு சாதகமாக இருந்தாலும் ஏனைய கிராமங்களுக்கு நஷ்டம் ஏற்படும்.
பொதுவாக பங்கேற்று மேற்கொள்ளப்படும் பணிகளில் அவர்களின் பங்களிப்பு குறைவாகவே இருப்பதை தற்போது காணக் கூடியதாக உள்ளது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment