விக்னேஸ்வரனின் விஷர் பேச்சு
"மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறிய முஸ்லிம்களே வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிராகச் செயற்படுகின்றனர். வடக்கையும் கிழக்கையும் நாம் இணைக்காவிட்டால் அது கிழக்குத் தமிழல்களுக்குச் செய்யும் துரோகமாகிவிடும்" இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழர் தலைவரின் ( சம்பந்தனின்) திருமலையானது தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடம் என்று சொல்லக் கூடிய நிலையில் நாம் இப்பொழுது இல்லை எனவும் அவர் கோடிட்டுக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சரால் வாரந்தம் ஊடகங்களுக்கு அனுப்பப்படும் கேள்வி பதில் அறிக்கையிலேயே இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிராக அமைச்சர்கள் ரிசாத் பதியூதீன், ஹிஸ்புல்லா ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் வடக்கு - கிழக்கு இணைப்புப் பற்றி நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் விழித்துக் கூறியுள்ளதாவது:
முஸ்லிம் மக்களுள் இருவகையினர் உள்ளார்கள். தென்னிந்தியாவில் இருந்து மரக்கலங்களில் வந்து இங்கு குடியேறியவர்கள். மத்திய கிழக்கில் இருந்து வந்து குடியேறியவர்கள்.
தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள் பலர் தமிழ்ப் பாரம்பரியங்களில் திளைத்தவர்கள். அவர்கள் முதலில் தமிழர்; அடுத்து இஸ்லாமியர்கள். ஆனால் அடுத்த பிரிவைச் சேர்ந்தவர்கள் தமது மதத்திற்கு முதல் இடம் கொடுப்பது மட்டுமல்லாமல் தம்மை வேறொரு இனமாக அடையாளப்படுத்தி வருகின்றார்கள்.
அவர்கள்தான் வடகிழக்கு இணைப்பை எதிர்ப்பவர்கள். அவர்கள் அவ்வாறு எதிர்த்தாலும் அவர்களின் மொழிப் பற்றின் நிமித்தம் வடக்கு - கிழக்கானது தமிழ்ப் பேசும் மாநிலங்கள் என்ற கருத்தை ஏற்றேயுள்ளனர். எனவே தமிழ்ப்பேசும் கிழக்கு மாகாணத்தினுள் சமச்சீர்மையற்ற ஒரு அலகை முஸ்லிம் மக்கள் பெற்றால் வட கிழக்கு இணைப்பை ஏற்க அவர்களுள் பலர் முன்வந்துள்ளார்கள். பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள முஸ்லிம் தலைவர்கள் வட கிழக்கின் இணைப்பை ஏற்காதது தமது மாநிலங்களில் அவர்களுக்கு வாக்கு கிடைக்காது போய்விடும் என்பதால்.
கிழக்கு தற்போது தமிழர்களிடம் இருந்து பறிபோய்விட்டது என்பது உண்மை. அதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் வட கிழக்கு இணைப்பைக் கைவிட்டால் நாம் எஞ்சிய கிழக்கு மாகாணத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்தவர்கள் ஆவோம். ஒரு சிங்கள பௌத்த பிக்குவிடம் போய் உதவி கேட்கும் அளவுக்கு அவர்களுக்குப் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.
அரசியல்வாதிகளின் புறக்கணிப்பின் நிமித்தம் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தமிழர் தாயகம் பாதுகாக்கப்படுவதன் அவசியம் போன்றே வட கிழக்கு இணைப்பும் அத்தியவசியமாகின்றது. இணைப்பின்றேல் தமிழினம் மறைந்து போகும் நிலை ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. மத ரீதியாக, சமூக ரீதியாக, தொழில் ரீதியாக, கல்வி ரீதியாக, அரசியல் ரீதியாக கிழக்கு மாகாணத் தமிழர்கள் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆகவே எமது கிழக்குச் சகோதர சகோதரிகளைப் பாதுகாக்க வட கிழக்கு இணைப்பு அத்தியாவசியமாகின்றது.
பேரினவாதம் தொடர்ந்து தலைகாட்டாமல் இருக்க வட கிழக்கு இணைப்பு அத்தியாவசியமாகின்றது. தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்த வட கிழக்கு இணைப்பு அத்தியாவசியமாகின்றது. இதைத் தெரிந்துதான் சிங்களத் தலைவர்கள் வட கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றார்கள். கிழக்கை முழுமையாகத் தம்வசப்படுத்தத் தாமதமாகிவிடுமோ? என்று அவர்கள் சிந்திக்கின்றார்கள்.
ஆனால் இன விருத்தியைப் பார்க்கும் போது முஸ்லிம் சகோதரர்களே கிழக்கைக் கைப்பற்றப் போகின்றார்கள். அவர்கள் இன விருத்தி கிட்டத்தட்ட 5 சதவீதம் என்றால் சிங்களவருடையது 2 சதவீதமும் தமிழர்களுடைய இனவிருத்தி வீதம் 1 சதவீதமும் ஆகும்.
எனவேதான் முஸ்லிம்களுந் தமிழர்களுஞ் சேர்ந்து இணைந்த வடகிழக்கில் தமிழ் வாழ வழிவகுக்க வேண்டும் என்கின்றேன்.
வடகிழக்கை இணைக்குமாறு எமது முன்னைய தமிழ்த் தலைவர்கள் கோரிய போது இருந்த நிலமை தற்போது முற்றிலும் மாறிவிட்டது. அப்போது வடகிழக்கு இணைப்பு, தமிழ் மக்களை கிழக்கு மாகாணம் பாரம்பரியமாகப், பெரும்பான்மையாகக் கொண்டிருந்தபடியால் கோரப்பட்டது.
இப்பொழுது தமிழ் மொழியையும் தமிழ்ப் பாரம்பரியங்களையும் பாதுகாக்க வேண்டிய ஒரு கடப்பாட்டின் நிமித்தம் வட கிழக்கு இணைப்புக் கோரப்பட வேண்டியுள்ளது. தமிழர் தலைவரின் திருமலையானது தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடம் என்று சொல்லக் கூடிய நிலையில் நாம் இப்பொழுது இல்லை - என்று அதில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
-பாறுக் ஷிஹான்-
200% true, please do in the action rather than talking. It needless to say the history of islam in Srilanka, we know who are they and what they have been doing since they invaded to this country.
ReplyDeleteSo spending time on actions to combine these two provinces makes sense. You can isolate these islamic fundamendalism from East by colobrating with sinhala ppl and leaders.
Now everybody in the world started to realize the ruthless.
விக்னேஸ்வரனுக்கு புத்தி பேதலித்து விட்டது. முதலில் நல்ல மன நோய் வைத்தியரை சந்திக்கவும். முஸ்லீம் இனத்தின் ( இலங்கை சோனகர்) வரலாறையே தெரியாத இவர் எப்படி ஒரு நீதியரசராக இருப்பார் என்று புரியவில்லை. அவரது பேரப்பிள்ளைகள் தமிழ் இனமா அல்லது சிங்கள இனமா என்பதை முதலில் தீமானிக்கட்டும். கிழக்கு மாகாணம் எந்த காரணம் கொண்டும் வடக்குடன் இணைக்க பட முடியாத விடயம். அது தமிழ், சிங்கள, முஸ்லீம் என்ற இனரீதியான சிந்தனையோட்டத்தையும் மீறி பொருளாதாரம் சம்பந்த பட்ட விடயம். காய்ந்து கிடைக்கும் வடக்குடன், செல்வம் கொழிக்கும் கிழக்கு மாகாணத்தை எந்த காரணம் கொண்டும் வடக்குடன் இணைக்க முடியாது. இதட்க்கு எந்த ஒரு கிழக்கு மாகாணத்தானும் இனங்கமுடியாது. இணங்கவும் கூடாது.
ReplyDeleteமனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
ReplyDelete(அல்குர்ஆன் : 4:1)
www.tamililquran.com
இவர் நல்லவர் என்று இவ்வளவு காலம் நினைத்திருந்தேன், இவர் ஒரு பச்ச இனவாதியாக இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.
ReplyDeleteசி.வி.விக்னேஸ்வரன் ஐயா அவர்களை நேர்மையான நீதியரசர் என்று எண்ணியிருந்தேன். இன்றுதான் புரிகின்றது அவர் நீதியரசராக இருந்து வழங்கிய தீர்ப்புக்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டுமென்று.
ReplyDeletehe is one of the biggest foolish in the century
ReplyDeleteவிக்கி சொல்லுவதும் உண்மை தானே
ReplyDeleteவயது போனதால் எதை எங்கே எப்படி பேசுவது என்று தெரியாமல் உளருகிறார் பாவம்.
ReplyDeleteயாரும் முஸ்லிம்களை கூறுபோட்டு எதிர்ப்பதை நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம் ஆனால் எங்களை நாங்களே கூறுபோட்டுக்கொண்டு எதிர்த்துக்கொண்டு அதை பெருமையாக பீற்றிக்கொள்ளுவோம்
ReplyDeleteVicky is a communal-minded guy.
ReplyDeleteMuslims should avoid to listen his nonsensical babblings.
In future, Jaffna Muslim should not publish any of this communal-minded guy's remarks.
இப்பேர்பட்ட மு அமைச்சர் !
ReplyDeleteஒரு விடயம் உண்மை!
சமூகமயப்படுத்தல் இவரில் இருந்து ஆரம்பிக்க வேணும்