பெற்றோலுக்கு தட்டுப்பாடா..? உடனே அழையுங்கள், வதந்திகளை பரப்பாதிர்கள்...!
நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலேனும் எரிபொருள் விநியோகத்துக்குத் தடை ஏற்பட்டிருப்பின், அல்லது எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை காணப்படுமாயின், 0115455130 என்ற தொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்புகொண்டு அறியத்தருமாறு, கனிய கனிய எண்ணெய் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென பொய் வதந்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும், கஅமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு பொய்யான வதந்திகளைப் பரப்புவர்களைக் கைதுசெய்யும் பொறுப்பு, குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, கனிய எண்ணெய் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
பெற்றோல் தட்டுப்பாடொன்று மீண்டும் ஏற்படப் போவதாக, நாடு முழுவதிலும் வதந்தியொன்று பரவி வருகின்றது. இருப்பினும், அவ்வாறு பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று, பெற்றோலிய வளத் திணைக்களம் அறிவித்துள்ளது.
முத்துராஜவெல மற்றும் கொலன்னாவ எண்ணெய் களஞ்சியசாலைகளில், 27,479 மெட்ரிக் தொன் எரிபொருள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதெனவும், திணைக்களம் மேலும் குறிப்பிட்டது.
Post a Comment