கேலி விபரீதமாகியது - கர்ப்பிணி மனைவியை கொன்றவனை, கொலைசெய்த கணவன்
வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணிற்கு கேலி செய்ய சென்று விளையாட்டு விபரீதமாகி கேலி செய்த நபர் குறித்த பெண்னை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். மனைவியை கொலை செய்ததை கண்ட கணவன் குறித்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
கடந்த 31ஆம் திகதி கோகரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெல்சிரிபுர பல்லியத்த ஹெவன தென்ன பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த சமயத்தில் “ நன்றாக உண்டு வாழும் நீங்கள் இப்போது பெரிய மனிதர்கள்” என்று கேலியாக நபரொருவர் கேட்க ஆத்திரமடைந்த குறித்த பெண் கோவமாக பதிலளித்துள்ளார் .
வார்த்தைகள் வளர்ந்து கோவத்தின் உச்ச கட்டத்திற்கு சென்ற கேலி செய்த நபர் கத்தயினால் குறித்த பெண்னை சரமாரியாக குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் மூழ்கிய பெண்னை காப்பாற்றி வைத்தியசாலையில் சேர்க்க முயற்சித்த பிரதேச மக்களை குறித்த நபர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
விடயம் அறிந்த பெண்ணின் கணவர் சம்பவ இடத்திற்கு விரைந்து இரத்த வெள்ளத்திலிருந்த தன் மணைவியை காப்பாற்ற முயற்சிக்கும் போது குறித்த நபர் கணவரையும் தாக்கியுள்ளார்.
அதன் போது இருவருக்கும் ஏற்பட்ட மோதல் உச்சக்கட்டத்தை அடைய பெண்ணின் கணவர் தனது கையிலிருந்த கத்தியால் குறித்த நபரை கத்தியால் குத்தியுள்ளார்.
கத்தி குத்து சம்பவத்தால் படு காயமடைந்த குறித்த நபர் மற்றும் பெண் கோகரெல்ல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் மெல்சிரிபுர பல்லியத்த ஹெவனதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய அஜித் குமார திசாநாயக்க ஆவார்.
குறித்த உயிரிழந்த நபரால் கத்தி குத்துக்குள்ளான பெண் கோகரெல்ல வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகலை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கடந்த 31ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த பெண் 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான அனோமா மல் காந்தியாவார்.
உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனையில் அவர் 9 மாத கர்ப்பிணி என ஊர்ஜினமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக 38 வயதுடைய குறித்த பெண்ணின் கணவரை கோகரெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment