சுதந்திரக் கட்சி + மஹிந்த அணி பேச்சு தோல்வி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மஹிந்த அணிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்வின்றி முடிவடைந்துள்ளது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
மஹிந்த அணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.பீ. ரத்நாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் பங்கேற்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் செயற்படுவதை தவிர்த்து, கூட்டு அரசாங்கத்தில் விலகி பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரிடம் மஹிந்த அணியினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தை இணக்கமின்றி முடிவடைந்துள்ளது.
இதையடுத்து, எதிர்வரும் நாட்களில் மற்றுமொரு பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளதாக இன்றைய பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
Post a Comment