வீதிகளில் தொழுகை, நடத்துவது தடுக்கப்படும் - பிரான்ஸ்
பிரான்சின் பாரிசில் வீதிகளில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவது தடுக்கப்படும் என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gerard Collomb தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பாரிஸ் வீதிகளில் வெள்ளிக்கிழமை தோறும் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 100 பேர் கொண்ட அரசியல் தலைவர்கள் குழுவினர் போராட்டம் நடத்தினர்.
பிரான்ஸ் போன்ற மதச்சார்பற்ற நாட்டில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மற்ற குடிமக்களுக்கு இருப்பது போன்ற சம உரிமையே அவர்களுக்கும் இருப்பதாக சுட்டிக் காட்டினர்.
இதற்கிடையே கடந்த 10ம் திகதி வீதிகளில் தொழுகை நடந்து கொண்டிருந்த போது, கவனத்தை திசை திருப்பும் வகையில் பிரான்ஸ் தேசிய கீதத்தை பாடியும், கோஷங்களையும் எழுப்பினர்.
இதற்கு முக்கிய காரணம், அரசுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த புகழ்பெற்ற உள்ளூர் பள்ளிவாசலை நூலகமாக மாற்றியதே.
இதற்கு பதிலாக வேறொரு இடம் தரப்படாததால் வீதிகளில் தொழுகை நடத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து Clichy மேயர், வடக்கு பகுதியில் உள்ள மற்றொரு பள்ளிவாசலை பயன்படுத்திக் கொள்ளலாமே என கருத்து தெரிவித்துள்ளார்.
அப்பள்ளிவாசல் சிறியதாகவும், பயணம் செய்வதற்கு சரியான போக்குவரத்து வசதியும் இல்லாததால் தங்களுக்கு மற்றொரு இடத்தை வழங்குமாறு வாதிடுகின்றனர்.
பிரான்சில் 10 மில்லியன் இஸ்லாமியர்கள் வசித்து வரும் நிலையில், இப்பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என உள்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையே பிரான்சின் மத்திய பகுதியில் வரும் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த திட்டமிட்டுள்ளதாக உள்ளூர் இஸ்லாமியர் அமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கவலை வேண்டாம் ஒரு காலம் வரும் தொழுகை மாத்திரமல்ல உலகெங்கும் பூரண ஆட்சிகூட முஸ்லிம்களிடம்தான் வரப்போகிறது,
ReplyDeleteMay Allah Protect the peace of this country.
ReplyDelete