Header Ads



பைஸர் முஸ்தபாவுக்கு எதிரான, பிரேரணக்கு முகங்கொடுக்க தயார்

உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணக்கு முகங்கொடுக்க தயாராகவுள்ளதாக நீதியமைச்சர் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

நேற்று(26) இரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் ​​போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நம்பிக்கையில்லாப் பிரேர​ணைகள் கொண்டுவரப்படுகின்றன. எனினும் அது தொடர்பில் கட்சித் தலைவர்கள் எடுக்கும் தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். எனவே அதற்கு குறித்த நேரத்தில் முகங்கொடுப்போம்” எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“அமைச்சர் பைஸர் முஸ்தபா அரசாங்கத்தின் அ​மைச்சர் என்ற ரீதியில் அவருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாம் அரசு என்ற ரீதியில் முகங்கொடுக்க தயாராகவுள்ளதாகவும்” அமைச்சர் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக கூட்டுஎதிரணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. அம்மா தாயே பை சர் முஸ்தபாட சவாலுக்கு முகம் கொடுக்கு முன்ன வசிம் தாஜ் டீன் கேசுக்கு முன்னுருமை கொடுத்து அத முடிச்சுவைம்மா. இல்லன்னா இந்த இலக்சனுக்கும் தாஜுடீன் மேடர் எனும் துரும்பத்தான் பாவிப்பாங்க.

    ReplyDelete

Powered by Blogger.