Header Ads



கேகாலை மாவட்டத்தின் முன்மாதிரி


எதிர்வரும் தேர்தலின்போது கேகாலை மாவட்டத்தில் பொலித்தீன் பாவனை இன்றி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், இன்று(9) சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தலைமையில்,  கேகாலை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்போது கருத்த தெரிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய,

'பொலித்தீன் பாவனையால் நுளம்பு பெருகி வருகிறது. இதன் காரணத்தினாலேயே தேர்தல் காலங்களில் பொலித்தீன் பாவனையை முற்றாகத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எனவே, எதிர்வரும் தேர்தலின்போது கேகாலை மாவட்டத்தில் பொலித்தீன் பாவனை இன்றி விளம்பரங்களை நடாத்துவதற்கு, அனைவராலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது' என அவர் தெரிவித்தார்.

மேற்படி கூட்டத்தில் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய துசிதா விஜயமான, சுஜித் சஞ்ஜய பெரேரா, சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன, கேகாலை மாவட்ட செயலாளர் சந்திரசிறி பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.