Header Ads



தமிழ் - முஸ்லிம் மக்களிடையே, இனவிரிசலை ஏற்படுத்த தீயசக்திகள் முயற்சி

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே இனவிரிசலை ஏற்படுத்தும் வகையில் தீயசக்திகள் முயற்சித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார்.

இனவாதத்தை தமிழ் - முஸ்லிம் மக்களிடையே தோற்றுவித்து அதன் மூலம் இனவாத அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதினெட்டாவது திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கு இனவாதம், மதவாதம், குலவாதம் பேசி அதை நிறைவேற்ற முயற்சி செய்தார்.

இதேபோன்று, இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையே இனவாதத்தையும், இனத்துவேசத்தையும் சிறுகட்சிகள் விதைத்து குறுகிய நோக்கத்திற்காக செயற்படுகின்றன.

தமிழ் - முஸ்லிம் மக்களிடையே கடந்த காலங்களில் பேணப்பட்டு வந்த இன ஐக்கியம், சமத்துவம், சமாதானம் என்பன கட்டியெழுப்பப்பட வேண்டும்.

இனக்களுக்கிடையே புரிந்துணர்வும் பேணப்படவேண்டும் எனவும் ஞானமுத்து சிறிநேசன் வலியுறுத்தினார்.

2 comments:

  1. இலங்கைக்கு விடிவு நீதியான சர்வாதிகாரத்தின் பின்பே!

    ReplyDelete

Powered by Blogger.