மிரட்டல் விட விரும்பினால், எங்களது ராக்கெட் வீச்சின் எல்லையை அதிகரிப்போம் - ஈரான்
ஈரான் நாட்டில் தயாரிக்கப்படும் ராக்கெட் வீச்சின் எல்லை 2 ஆயிரம் கி.மீட்டருக்குள் உள்ளது. இதனால் 2 ஆயிரம் கி.மீட்டருக்கு உட்பட்ட பகுதிகளை தாக்கி அழிக்கும் வகையில் இந்த வகை ராக்கெட்டுகள் உள்ளன.
இந்த நிலையில், ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின் துணை தலைவரான சலாமி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, எங்கள் ராக்கெட்டுகளின் வீச்சின் எல்லை 2 ஆயிரம் கி.மீட்டருக்குள் உள்ளது என்றால் அது தொழில்நுட்ப பற்றாக்குறையினால் அல்ல. நாங்கள் ராணுவ கொள்கையினை பின்பற்றி வருகிறோம் என கூறினார்.
தொடர்ந்து அவர், ஐரோப்பா எங்களுக்கு மிரட்டலாக இல்லை என நாங்கள் நீண்ட நாட்களாக கருதி வந்தோம். அதனால் ராக்கெட்டுகள் வீச்சின் எல்லையை நாங்கள் அதிகரிக்கவில்லை. ஆனால், ஐரோப்பா மிரட்டல் விட விரும்பினால், எங்களது ராக்கெட் வீச்சின் எல்லையை அதிகரிப்போம் என கூறியுள்ளார்.
Shiya always will defeat
ReplyDeleteஷைத்தான்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான்; ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள் - நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள்.
ReplyDelete(அல்குர்ஆன் : 3:175)