வடகிழக்கை இணைக்க, முஸ்லிம்கள் எதிர்கிறார்கள் - மஹிந்த, ஹிஸ்புல்லாவுக்கும் பாராட்டு
முன்னாள் ஜனாதிபதியும் ஒன்றிணைந்த எதிரணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் உரையை ஆமோதித்து, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா, கருத்துத் தெரிவித்ததையடுத்து, அவையிலிருந்த ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள், மேசைகளில் தட்டிப் பாராட்டினர்.
புதிய அரசமைப்புக்கான அரசமைப்புச் சபை வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், அரசமைப்புச் சபையில் நேற்று (02) நான்காவது நாளாகவும் இடம்பெற்றது.
இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிக்கொண்டிருந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஒரு சந்தர்ப்பத்தில், “வடக்கு, கிழக்கை மீண்டும் இணைப்பது தொடர்பான விவகாரம் குறித்து, முஸ்லிம்களுடன் நான் கலந்துரையாடியபோது, அவர்கள் அதற்கு எதிரப்பையே வெளியிட்டிருந்தார்கள். வடக்கு, கிழக்கை இணைத்தால் கிழக்கில் உள்ள தமிழர்களின் நிலைப்பாடு என்ன என்பதையும் சிந்திக்க வேண்டும்” என்றார்.
“இங்கே, அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும் இருக்கிறார்” என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியபோது, தன்னுடைய ஆசனத்தில் இருந்து எழுந்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், ஒலிவாங்கி முடுக்கிவிடப்படாத நிலையில்,
“வடக்கு, கிழக்கு இணைப்பை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாம் ஒருபோதும் இணங்கமாட்டோம்” என்றார்.
இதன்போது அவையிலிருந்த ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள், மேசையில் தட்டிப் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
வடக்கையும் கிழக்கையும் இணைக்கிறது ரொம்ப ரொம்ப சுலபமான திடடம். பெரிசா செலவு ஒன்னும் வராது. வடக்கு எல்லையிழும் கிழக்கு எல்லையிலும் ரெண்டு கொழுக்கியை மாட்டி அது ரெண்டையும் ஒண்ணா சேர்த்து கட்டிடுங்க. அசையுதான்னு பார்ப்போம். எப்பிடி அய்யாட idea. (நீ அறிவுக்கு கொழுந்து டா)
ReplyDeleteதமிழர்கள் கடைசியாக அதை தான் செய்யமுடியும்
Delete