ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து, பெற்றோலைச் சுமந்துவந்த கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது
நாற்பது மெட்ரிக் தொன் பெற்றோலைச் சுமந்து வரும் ‘நெவெஸ்கா லேடி’ எண்ணெய்த் தாங்கிக் கப்பல், இலங்கைக் கடற்பரப்புக்குள் சற்று முன் நுழைந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திடீர் பெற்றோல் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து உடனடியாக 40 மெட்ரிக் தொன் பெற்றோல் தருவிக்கப்படுவதாக அரசு கூறியிருந்தது.
அதன்படி, மேற்படி பெற்றோலைச் சுமந்து வரும் கப்பலான நெவெஸ்கா லேடி இலங்கையின் கடற்பரப்பினுள் நுழைந்திருப்பதாகவும், மிக விரைவில் அதில் உள்ள பெற்றோல் நாடெங்கும் வினியோகத்துக்காக வழங்கப்படும் என்றும் தெரியவருகிறது.
Post a Comment