'மைத்திரிபாலவின் கூட்டத்திற்கு வரமாட்டோம்'
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நாளை இடம்பெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஒன்றிணைந்த எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
“கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதுசெய்யபட்டுள்ளமை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுதல், முன்னாள் ஜனாதிபதியால் ஒன்றிணைந்த எதிரணி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட காரணங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து கட்சிச் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்ப எதிர்பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவின் தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” .
Post a Comment