Header Ads



போர் வெடிக்குமென, கோத்தபாயாவின் அமைப்பு எச்சரிக்கை

புதிய அர­சியல் அமைப்பு நிறை­வேற்­றப்­பட்டு மாகா­ண­ச­பை­க­ளுக்கு அதி­காரம் பகி­ரப்­பட்டால் நாட்டில் 30 வரு­ட­கா­ல­மாக இடம் பெற்ற யுத்த சூழல் மீண்டும் உரு­வாகும் என்­பதில் எவ்­வித ஐயமும் இல்லை என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தலை­மை­தாங்கும் எதிர்­பார்ப்­புக்களை ஒளியேற்றும் அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

தேசிய நூல­கத்தில் நேற்று இடம்­பெற்ற விஷேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. இதன்போது உரை­யாற்­றிய எதிர்­பார்ப்­புக் களை ஒளியேற்றும் அமைப்பின் செயற் ­பாட்­டாளர் சிறி­யந்த மென்டிஸ் கூறு­கை யில், தற்­போது நாட்டில் புதிய அர­சியல் அமைப்­பினை நிறை­வேற்­று­வதில் அனை­வரும் மும்­மு­ர­மாக செயற்­ப­டு­கின்­றனர்.  ஆனால் இந்த அர­சியல் அமைப்பு  நிறை­வே­றினால் ஏற்­படும் ஆபத்­துக்கள் குறித்து யாரும் பேசு­வ­தில்லை. மாகாண சபை­க­ளுக்கு அதி­காரம் பகி­ரப்­பட்டால் மீண்டும் நாட்டில் யுத்த அழி­வு­களே தோன்றும் என்­ பதை அறிந்தும் அறி­யா­த­வர்கள் போல் உள்­ளனர்.

மாகா­ணங்­க­ளுக்கு அதி­காரம் பகி­ரப்­பட்டால் மத்­திய அர­சிற்கு மீண்டும் அதி­கா­ரத்தை பெற முடி­யாமல் போகும். அது  மட்­டு­மல்­லாமல் மாகா­ண­ச­பை­க­ளுக்கு இடை­யிலும் முரண்­பா­டுகள் தோன்றும். இதனால் எதிர்­கா­லத்தில் நாட்டில் உரு­வாகும் பாதிப்­பினை அறிந்தும் அரச தலை­வர்கள் அமை­தி­யாக இருப்­பது வியக்­கத்­தக்­கது.

நாட்டில் அதி­காரம் பகி­ரப்­பட்டால் மாகா­ண­ச­பைகள் பல­ம்­மிக்­க­தாகி மத்­திய அரசு பல­வீ­ன­ம­டையும். ஜனா­தி­பதி வெறும் நாம­நிர்­வா­கி­யா­கவே செயற்­ப­டுவார்.

நாட்டின் தலை­யெ­ழுத்தை மாற்­று­வ தும் தற்­போது நாடு எதிர்­நோக்­க­வுள்ள  அழி­ வினை தடுப்­பதும் பொது­மக்­களின் கைக­ளி­லேயே உள்­ளன. அதனால் மக்­களின் ஜன­நா­ய­கத்தை  வெளிப்­ப­டுத்தும் தேர்­த­லினை முறை­யாக பயன்­ப­டுத்தி நாட்­டை யும் பொது­மக்­க­ளையும் காப்பாற்றுவது மக்களின் கைகளில் உள்ளதே தவிர 225 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அல்ல.

எனவே புதிய அரசியல் அமைப்பு நிறை வேறுவதில் உள்ள பிரச்சினைகளை மட் டும் பார்க்காமல் நிறைவேற்றினால் உரு வாகும் பிரச்சினைகளை ஆராய்ந்து ஜனா திபதி நல்ல தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்  என தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.