ஜிந்தோட்டையை பாரிய, இனக் கலவரமாக மாற்ற முயற்சி
கிந்தொட்ட பிரச்சினையை பாரிய இனக் கலவரமாக மாற்றுவதற்கு சில அடிப்படைவாத அரசியல் குழுக்கள் பகீரதப் பிரயத்தனங்களை முன்னெடுத்து வருவதாகவும், இதனால், இக்குழுக்களின் போலியான பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம் எனவும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த அடிப்படைவாத குழுக்களின் நடவடிக்கைகள் தற்பொழுதும் பேஸ்புக் ஊடாக வீடியோ காட்சிகள் மற்றும் செய்திகள் போன்றவற்றினூடாக பரிமாறப்படுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகளிலிருந்து விலகிவிடுமாறு நான் அவர்களுக்கு கட்டளையிடுகின்றேன்.
அத்துடன், இனவாத, மதவாத மோதலை ஏற்படுத்தும் வகையில் ஏதோ ஒரு வகையில் பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தை அமுல்படுத்தப் போவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற ஒரு நிலைமையில் சேதங்களை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதே முக்கியமானது. இந்த நிகழ்வின் பின்னால், அற்பமான அரசியல் லாபம் கருதி செயற்பட வேண்டாம் என்பதை மீண்டும், மீண்டும் கேட்டுக் கொள்வதாகவும் அமைச்சர் விசேட அறிக்கையொன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கு முன்னால் இப்படியா கீழ்தரமான பாவகாறியங்கை ஒருசாது ஞானசார செயதார் அவரை விசாரித்து நடவடிகை எடுக்காமல் சுகந்திரமாக வாழ்வதற்கு விட்டீர்கள் தற்போது ஏனைய சாதுக்களும் இவைகளை நாம் செய்தால் நம்மை யார் கேற்பது என்று இவ்வாறான விடயங்களில் தங்களுக்கு பிரபல்யம் தேடி செய்துள்ளார்கள்!!!
ReplyDelete