Header Ads



இலங்கை வரலாற்றில், மிக உயர்ந்த சர்வதேச விருது

இலங்கை வைத்தியர் ஒருவருக்கு மிக உயர்ந்த சர்வதேச விருது கிடைத்துள்ளது.

2017 ஆம் ஆண்டுக்கான சுகாதாரத்துறை சம்பந்தப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையின் முன்னாள் சுகாதார சேவை மருத்துவ இயக்குனர் ஜீ.ஜீ.சமல் சஞ்ஜீவ என்பவருக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது.

Global Award For Academic Championship 2017 என்ற இந்த விருந்து, உலகின் சிறந்த விஞ்ஞான தகவல் தொடர்பு ஆராய்ச்சி நடவடிக்கையில் ஈடுபடும் International Agency For Standards and Rating (IASR) என்ற நிறுவனத்தினால் வழங்கப்படுகின்றது.

அத்துடன் வைத்தியர் ஜீ.ஜீ.சமல் சஞ்ஜீவ அந்த நிறுவனத்தில் (Fellow, Directorate of Health Service – IASR) வாழ்நாள் உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.

இலங்கையின் நீண்ட கால வரலாற்றில் முதல் முறையாக இந்த விருது கிடைத்துள்ளமை குறிப்பிடக்க முக்கிய விடயமாகும்.

உலகம் முழுவதும் 56 நாடுகளின் 6000 அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் 2017ஆம் ஆண்டிற்கான அறிக்கையை சமர்ப்பித்தனர். இவர்களில் இலங்கை வைத்தியர் ஜீ.ஜீ.சமல் சஞ்ஜீவ பெற்றிருப்பது இலங்கை சுகாதார சேவைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

அத்துடன் IASR நிறுவனத்தின் கௌரவிப்பிற்கமைய உலகின் மிக சிறந்த சுகாதார சேவையாளர் 500 பேருக்குள் வைத்தியர் ஜீ.ஜீ.சமல் சஞ்ஜீவ தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

Powered by Blogger.