Header Ads



கட்டார் பறப்பதற்கு, சிலருக்கு விசா தேவையில்லை

இராஜதந்திர விசேட மற்றும் கடமைகளுக்கான கடவுச்சீட்டை கொண்டுள்ள பிரஜைகளுக்கு விசா அனுமதியை பெற்றுக் கொள்வதில் இருந்து விடுவிப்பதற்காக இலங்கை மற்றும் கட்டார் நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் கயந்த கருணாதிலக மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் கட்டார் நாடுகளுக்கு விஜயம் செய்யும் இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கும் இலங்கை மற்றும் கட்டார் பிரஜைகளுக்கு விசா அனுமதியை பெற்றுகொள்வதில் இருந்து விடுவிப்பதற்காக இலங்கை மற்றும் கட்டார் அரசாங்கத்திற்கு இடையில் கைச்சாத்து இடப்படவுள்ளது.

இதற்காக உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கயந்த கருணாதிலக குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.