ஜிந்தோட்டை வன்முறை - வதந்தி பரப்பியோரை பிடிக்க நடவடிக்கை
காலி, ஹிங்தொட்டவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், சமூக வலைத்தளங்களில் மற்றும் ஏனைய முறைமைகளின் ஊடாக பொய்யான தகவல்களை பிரசாரப்படுத்திய, பிரிவினைவாத நபர்களை கைதுசெய்றவதற்கான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசேடமாக, சமூக வலைத்தளங்களின் ஊடாக இவ்வாறான பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்த நபர்கள் தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.
அதற்கான கட்டளையை, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பிறப்பித்துள்ளார் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
2
காலி, ஹிங்தோட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்றுள்ள முறுகல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, இன விரிசலை ஏற்படுத்தும் வகையில், போலி பிரசாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு, அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, “ஹிங்தோட்ட சம்பவத்தை, சமூக வலைத்தளங்களில் போலியாகத் திரிவுபடுத்தி, வீடியோக்களையும் செய்திகளையும் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹிங்தோட்ட பகுதியில் நிலவிய பதற்றம் தற்போது தணிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
GREAT WORK.... Should be fair....
ReplyDelete