Header Ads



ஜனாதிபதியை அனுமதிக்க மறுத்த, வைத்தியசாலை அதிகாரிகள் - விசாரணை ஆரம்பம்

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று காத்திருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிக்குவின் நலம் விசாரிப்பதற்காக, நேற்று முன்தினம் ஜனாதிபதி சென்றுள்ளார்.

குறிப்பிடத்தக்களவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஜனாதிபதி வாகன அணி வைத்தியசாலைக்கு சென்றுள்ளது.

ஜனாதிபதி பயணித்த மோட்டார் வாகனம் தேசிய வைத்தியசாலையின் இரண்டாம் இலக்க கேட்டிற்குள் நுழைய முயற்சித்த போது, அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த அதிகாரிகள் உள்செல்ல அனுமதி வழங்கவில்லை.

நோயாளிகளை பார்ப்பதற்காக தாமதமாக வரும் வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

காரில் ஜனாதிபதி இருப்பதாக வைத்தியசாலை வளாகத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் பலமுறை, ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனினும் அதனை நம்பாத வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் வாகனத்தை வைத்தியசாலைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.

பின்னர் ஜனாதிபதி மோட்டார் வாகன ஜன்னலை திறந்து பாதுகாப்பு பிரிவினருக்கு கை அசைத்துள்ளார். அதன் பின்னர் மன்னித்துவிடுங்கள் சர் என கூறி வாகனத்தை அனுமதித்துள்ளனர்.

இதனால் ஜனாதிபதி 5 நிமிடங்களுக்கும் அதிக நேரம் வைத்தியசாலை நுழைவாயிலுக்கு அருகில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியை உள்ளே அனுமதிக்காத அதிகாரிகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

8 comments:

  1. Nothing wrong with the security system. They allowed after showing his identity ( i mean the face). They can not simple allow based on the statement of the bodyguard.

    They should be rewarded for their duty in line with rules.

    ReplyDelete
  2. Appreciate the security

    ReplyDelete
  3. Great Work of our Hospital Security Guard. Crazy What Investigation?
    He should be rewarded for his sincerity in duty.

    ReplyDelete
  4. As far Yaapaalaneye concern, Security Officer has done his duty part. so no point of taking against him.

    ReplyDelete
  5. I appreciate that particular security officer. What he did was correct....
    He tries to adhere to rules and regulations of his duty

    ReplyDelete
  6. The security guard should be rewarded for his duty. But in Sri Lanka always upside down.

    ReplyDelete
  7. Security officer has done his duty perfectly.

    ReplyDelete

Powered by Blogger.