Header Ads



முஸ்லிம்கள் மீது, பழிபோடும் யோகேஸ்வரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இனமுரண்பாடுகளுக்கு வாழைச்சேனை பொலிஸாரும், முன்னாள் முதலமைச்சருமே முழுப்பொறுப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்றைய தினம் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் தே.இளங்கோ தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இனமுறுகள் தோன்றியுள்ளதாக கூறுகின்றார்கள், அது ஏன, எப்படி வந்தது என்று பலருக்கு தெரியாது.

ஒரு சம்பவம் இடம்பெறும்போது அந்த சம்பவத்துடன் தொடர்புபடுகின்றவர்கள் தப்பித்துவிடுகின்றனர், அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அப்பாவிகள் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாது, எந்த இனத்தை சேர்ந்தவர், என்றாலும் அவர்களுக்கு துன்பம் ஏற்படுத்தக்கூடாது.

சில தினங்களுக்கு முன்னர் வாழைச்சேனையில் பேருந்து தரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன, பிரதேசம் என்பது தமிழ் மக்களின் பிரதேசமாக காணப்படுகின்றது.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதி கறுவாக்கேணி கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்டது, அப்பகுதியில் எந்த முஸ்லிம்களும் இல்லை, அவ்விடத்தில் இருந்து பல பகுதிகளுக்கு செல்வோர் பேருந்துக்காக காத்திருப்பர், எனவே அவ்விடத்திற்கு ஒரு பேருந்து தரிப்பிடம் தேவையாகவிருந்தது.


அந்த பேருந்து தரிப்பிட விடயத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலையம் ஒரு இன ரீதியாக செயற்பட்டதன் காரணமாக முஸ்லிம் இனத்திற்கு ஆதரவாக செயற்பட்டதன் காரணமாக அந்த பிரச்சினை பெரிதாக மாற்றம் பெற்றுள்ளது.

பொலிஸார் அந்த பிரச்சினையை முச்சக்கர வண்டி தரிப்பிட பிரச்சினையாக மாற்றி திரிவுபடுத்தியுள்ளனர்.

முச்சக்கர வண்டி தரிப்பிடம் தொடர்பிலும் வாழைச்சேனை அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, முன்னாள் முதலமைச்சர் பதவியில் இருக்கும்போது, அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

குறித்த பிரதேசம் தமிழர்களுக்கு உரியது, அது தமிழ் மக்களுக்குத் தேவையான ஒரு பகுதி, ஏற்கனவே ஆறு இடங்களுக்கு மேல் முச்சக்கரவண்டி தரிப்பிடங்கள் உள்ளது.

அனைத்திலும், முஸ்லிம் முச்சக்கரவண்டி சாரதிகள் பயன்படுத்துவதனால் இந்த பகுதியை தமிழ் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு ஒதுக்கவேண்டும் என வாழைச்சேன பிரதேசசபை செயலாளருக்கு பிரதேச அபிவிருத்திக்குழு உத்தரவிட்டது. அதனை பிரதேச செயலாளரும் உறுதிபடுத்தியிருந்தார்.

ஆனால் அதனை வாழைச்சேன பிரதேசசபை செயலாளர் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றபோது, அதற்கொரு குழுவினை அமைத்து அவர் தேவையற்ற விடயத்தினை கையாண்ட காரணத்தினால்தான் அந்த முச்சக்கரவண்டி தரிப்பிட பிரச்சினையும் பூதாகரமாக எழுந்தது.

பொலிஸார் சரியான முறையில் அணுகியிருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது.

இந்த பிரச்சினைகள் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் அவர்களை சார்ந்தவர்களும் சரியான முறையில் செயற்படவில்லை.

சட்டத்தினை அவர்கள் சரியானமுறையில் கையாளவில்லை. ஒரு இனம்சார்ந்து செயற்பட்டுள்ளனர். தேவையற்ற விடயங்களையும் முரண்பாடான கருத்துகளையும் எழுதி நீதிமன்றுக்கு வழங்கியுள்ளனர். அதனால் அங்கு மேற்கொள்ளப்பட்ட பணிகளை அங்கிருந்து அகற்றுமாறு நீதிமன்றினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே முறுகல் நிலைகள் ஏற்பட்டன.

இந்த முறுகல் நிலைகளுக்கு மூலகாரணம் பொலிஸ் பகுதியினரும் முன்னாள் முதலமைச்சர் நசீர் அகமட் ஆகியோர் என்பதனை ஆணித்தரமாக கூறவிரும்புகின்றேன். இவர்கள் குறுகிய அரசியல் இலாபம் கருதி இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. யோகேஸின் உளறல்களை முஸ்லீம், தமிழ் மக்கள் கணக்கெடுக்க வேண்டியதில்லை.

    ReplyDelete
  2. Why are dividing even parking lots on ethnic ground? Why do people need Muslim parking and Tamil parking? Change your thinking so all communities will live peacefully.

    ReplyDelete
  3. ஐயா உங்கட வாயால் நீங்கள் இனவாதம் பேசுவதேயில்லை. ஆனால் உங்களை அறியாமலே இனவாதம் வாய்வழியாக கொட்டிவிடும். ஐயோ பாவம். இந்த மனிசனுக்கு வாய கட்டுப்படுத்தி வைக்கமுடியாதளவு இனவாதம் தலைக்க அடிச்சிட்டு.

    ReplyDelete
  4. கிழக்கில் இத்தனை பிரச்சினைக்கும் முக்கிய காரணம் இந்த தமிழ் ஹிந்து இனவாதி தான். இவன் மக்களுக்கு சேவை செய்ய வக்கில்லாதவன் காரணமில்லாமல் சில மாதங்களுக்கு முன் அமீரலியை வம்பிற்கு இழுத்தபோதே இவன் மோசமான இனவாதியென்பதை காட்டிவிட்டான்

    ReplyDelete
  5. Who's this hanuman?

    ReplyDelete
  6. Well done Yogeswaran, we believe you 100%

    ReplyDelete

Powered by Blogger.