கிராமங்களில் அடுத்தவருடம், ஆட்சியதிகாரத்தை கைபற்றுவோம் - ரணில்
2015 ஆம் ஆண்டு நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது போல், 2018 ஆம் ஆண்டு கிராமங்களில் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்ற போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைய நல்லாட்சி செய்யும் எவருடனும் இணைந்து பணியாற்ற அரசாங்கம் தயாராக இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாவலப்பிட்டி தொகுதி அதிகார சபைக் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி அதிகாரத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றி சிறிது காலத்தில் நாட்டின் நற்பெயரை கட்டியெழுப்பி, அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்க முடிந்தது.
உள்ளூராட்சி சபைகளின் அதிகாரமும் அரசாங்கத்திடம் இருந்தால் இதனை விட பெரும் பணிகளை செய்திருக்க முடியும்.மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என அன்று பலர் கூறினர்.
எனினும் அந்த சவாலை ஏற்று நல்லாட்சிக்காக சகல தரப்பினரும் இணைந்து மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக நிறுத்தி ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம்.பின்னர் பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்தோம்.
அரசாங்கத்தை அமைத்தாலும் எமக்கு நாட்டின் அதிகாரம் மட்டுமே கிடைத்தது.மாகாண சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகளின் அதிகாரம் எமக்கு கிடைக்கவில்லை.
இதன் காரணமாக அவற்றின் பணிகளை செய்யும் போது பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்த நிலைமையை மாற்றி விரிவான அபிவிருத்திகளை செய்ய வேண்டுமாயின் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தையும் நாம் கைப்பற்ற வேண்டும்.
மனித உரிமைகள் மீறப்பட்டு முழு உலகமும் ஒதுக்கியிருந்த நாட்டை நாங்கள் 2015 ஆம் ஆண்டு நாங்கள் பொறுப்பேற்றோம். நாட்டின் பொருளாதாரம் முற்றாக அழிந்து போயிருந்தது.
எனினும் நிலைமைகளை மாற்றி உலகத்தின் உதவிகளை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்தது.நானும் ஜனாதிபதியும் உலகம் முழுவதும் பயணம் செய்து இல்லாமல் போயிருந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பினோம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
ReplyDelete(அல்குர்ஆன் : 3:26)
நரிக்கு இனி ஒரேயொரு முஸ்லிம் வாக்காவது கிடைக்காது
ReplyDelete