பல்போர் பிரகடனத்தின் நூற்றாண்டு பூர்த்தி - பலஸ்தீனத்தில் பாரிய எதிர்ப்புப் போராட்டங்கள்
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மற்றும் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே பங்கேற்ற பல்போர் பிரகடனத்தின் நூற்றாண்டு பூர்த்தி நிகழ்வு பிரிட்டன் தலைநகர் லண்டனில் நேற்று இடம்பெற்றது.
பலஸ்தீனத்தில் யூத மக்களுக்கு ஒரு நாட்டை உருவாக்க பிரிட்டனின் ஆதரவை வெளியிடும் வகையில் அந்நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஆர்தர் பல்போரின் 67 சொற்களாலான கடிதமான, பல்போர் பிரகடத்திற்கு நேற்றுடன் ஒரு நூற்றாண்டு பூர்த்தியானது.
இதனையொட்டியே நெதன்யாகு பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் யூத சமூகங்கள் இந்த பிரகடனத்தை முக்கியம்வாய்ததாக கருதும் நிலையில், பலஸ்தீனர்கள் இதனை வரலாற்று அநீதி என்று குறிப்பிடுகின்றனர்.
இது தொடர்பில் மன்னிப்புக் கேட்க மறுத்த பிரிட்டன் இந்த பிரகடனத்தின் பங்களிப்பு குறித்து பெருமை வெளியிட்டுள்ளது.
இதனையொட்டி லண்டனில் நேற்று நடந்த விசேட இரவு விருந்தில் நெதன்யாகுவுடன் தெரேசா மேயும் பங்கேற்றனர். பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் கொள்கைகள் தொடர்பில் நீண்ட காலமாக கடும் விமர்சனம் வெளியிட்டு வரும் பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் ஜெரமி கொர்பின் இந்த விருந்துக்கான அழைப்பை நிராகரித்தார்.
பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சனுடனும் நெதன்யாகு வேறாக சந்திப்பொன்றை நடத்தவிருந்தார்.
இஸ்ரேல் பல்போரின் ஞாபகார்த்தமாக டெல் அவிவின் வீதி மற்றும் பாடசாலைகளுக்கு அவரது பெயரை சூட்டியுள்ளது. எனினும் தனக்கு சொந்தமில்லாத நிலத்தை கையளிக்க வாக்குறுதி அளித்தவர் என்றே பலஸ்தீனர்கள் பல்போரை கருதுகின்றனர்.
பல்போர் பிரகடனத்தின் நூற்றாண்டு நிகழ்வை ஒட்டி பலஸ்தீனின் மேற்குக் கரை, கிழக்கு ஜெரூசலம் எங்கும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருவதோடு அதன்போது ஆர்தர் பல்போரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.
பல்போர் பிரகடனத்தை எதிர்த்து லண்டன் நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
பல்போர் பிரகடனத்திற்காக பிரிட்டன் அரசு மீது வழக்கு தொடர்வது குறித்து பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் முன்னர் அறிவிப்பொன்றை விடுத்தபோதும் அது இன்றுவரை செயற்படுத்தப்படவில்லை.
யூதர்களும் கிறிஸ்தவர்களும் சிலர் சிலருக்கு நண்பர்களாக இருப்பார்களே தவிர அனைவரும் இந்த அனியாயத்தை ஆதரிக்கமாட்டார்கள்...
ReplyDelete6ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இஸ்ரேல் மீழ பெற்றுவிட்டனர்.
ReplyDeleteஇஸ்ரேல் நாடு உருவானதை UN அதிக வாக்குகளால் அங்கிகரித்தது. அப்போ எங்கே போனது 50 முஸலிம் நாடுகளும்?
இலங்கை கூட இஸ்ரேலை அங்கிகரித்தது. அப்போ எங்கே போனது உங்கள் தன்மானம்?
ஆறாம் நூற்றாண்டு மிக விரைவில் மீண்டுவரும் நம் அனைவர்களையும் சுவனம் புக செய்ய
Delete