ஹாதியாவுக்கு பாதுகாப்பு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவு
நாடே பரபரப்போடு எதிர்பார்க்கப்பட்ட ஹாதியா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஹாதியா தம்முடைய கணவரின் பாதுகாப்பிலேயே இருப்பதாக கூறியுள்ளார்.
வழக்கின் இறுதி தீர்ப்பை ஒத்திவைத்துள்ள உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில்,
ஹாதியா வீட்டு காவலில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஹாதியா தம்முடைய கல்வியை தொடரலாம் என்றும், ஹாதியாவுக்கான பாதுகாப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், ஹாதியாவின் கல்லூரி முதல்வரே ஹாதியாவின் பாதுகாவலராக இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
ஹாதியாவை பார்க்க பெற்றோரோ கணவரோ வந்தால் அவர்களை கல்லூரி முதல்வர் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தமிழக அரசின் செலவில் படிப்பை மேற்கொள்கிறாயா என்ற நீதிபதியின் கேள்விக்கு தம்முடைய கல்விக்கான செலவை செய்ய கணவர் இருக்கும்போது தமிழக அரசின் கல்வி உதவி வேண்டாம் என்று கூறியுள்ளார்.
11 மாதங்களாக சட்டத்திற்கு புறம்பாக தந்தையின் கட்டுப்பாட்டில் அடைத்து வைக்கப்பட்ட ஹாதியாவுக்கு உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முதல்கட்ட மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கிறது.
Post a Comment