Header Ads



றூமி மஹ்மூத், இனந்தெரியாத குழுவினால் தாக்கப்பட்டார்

மக்கள் சக்தி முண்ணனியின் தேசிய தலைவரும், பிரபல அரசியல் செயற்பாட்டாளருமான றூமி மஹ்மூத், இனந்தெரியாத குழு ஒன்றினால் நேற்று முன்தினம் இரவு பலமாகத் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இத் தாக்குதல் தொடர்பாக மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள அவரைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை.

இவர் கடந்த சில வாரங்களாக அரசாங்கமும், சிறுபான்மைக் கட்சிகளும் சமூகத்திற்குச் செய்யும் அநீதிகளை, மக்கள் முன் எடுத்துக் காட்டும் பிரச்சாரத்தில் மிகவும்  முனைப்பாக ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.