மஹிந்த புலிகளை முடித்தபின், தமிழ் பேரினவாதம் வாலை சுருட்டிக்கொண்டு படுத்தது.
2015ல் நல்லாட்சிக்கு ஆதரவளித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் பலருக்கு இப்போதுதான் ஞானம் வந்துள்ளது இந்த ஆட்சி மோசம் என்றும் மஹிந்த பரவாயில்ல என்றும். மஹிந்த புலிகளை முடித்த பின் முஸ்லிம்கள் சிங்கள பேரினவாதத்துக்கு முகம் கொடுத்தது உண்மை. ஆனால் தமிழ் பேரினவாதம் வாலை சுருட்டிக்கொண்டு படுத்தது.
ஆனால் இப்போது ஒரு பக்கம் சிங்கள பேரினவாதம், இன்னொரு பக்கம் தமிழ் பேரினவாதம்.
உலமா கட்சி படித்து படித்து சொன்னது. தென்னிலங்கை முஸ்லிம்கள் மஹிந்தவுக்கெதிராக வாக்களிக்கலாம். அதில் ஓரளவு நியாயம் உண்டு. ஆனால் கிழக்கு மக்கள் மஹிந்தவுக்கே ஆதரவளிக்க வேண்டும் என்று.
இதில் கிழக்கு தலைமைகளான ஹிஸ்புள்ளா, அதாவுள்ளா, முபாறக் அப்துல் மஜீத் ஆகியோர் இதில் மிக உறுதியாக இருந்தனர். மக்களுக்கும் விளக்கினர். ஆனால் கிழக்கு மக்களுக்கு எப்போதுமே முற்றத்து மல்லிகை மணப்பதில்லை. இதனால் ஹக்கீமின் வார்த்தைகளை குர் ஆனின் வார்த்தைகளாகவும் மற்றவர்களின் வார்த்தைகளை ஷாத்தானிய வார்த்தைகளாகவும் பார்த்தனர். இன்று இதன் விளைவுகளை கண் முன்னால் காண்கின்றோம். ஐக்கிய தேசியக்கட்சியும் ஹெல உறுமயும், முஸ்லிம் காங்கிரசும், தமிழ் கூட்டமைப்பும்
இணைந்து கொண்டு வந்த இந்த ஆட்சியில் முஸ்லிம் சமூகம் ஒரு உரிமையையாவது பெற்றதுண்டா? மாறாக இழந்ததுதான் அதிகம். இன்று வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தமிழ் பேரினவாதத்தினால் அடி வாங்கும் நிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. 2015 முதல் இன்று வரை எவற்றையெல்லாம் இழந்துள்ளோம் என்று சமூகம் சிந்திக்க வேண்டும்.
ஜின்தோட்டை, வவுனியா என இன்று இனவாதம் அகோர தாண்டவமாடுகிறது. மஹிந்த ஆட்சியின் போது அளுத்கம பாதிக்கப்பட்ட போது இரணுவம் அந்த வீடுகளை கட்டிக்கொடுத்தது. ரணிலின் ஆட்சியில் பாதுகாப்பு படை முன்னின்று கொள்ளையிட்டதாக ஊடகங்கள் சொல்கின்றன. ஆக முஸ்லிம் சமூகம் தனது முதுகில் தானே மண் அள்ளி போட்டுக்கொண்டுள்ளது.
- முபாறக் அப்துல் மஜீத்-
முஸ்லிம் பேரினவாதம் இப்ப என்ன பண்ணுது?
ReplyDeleteloosu
ReplyDeleteRed Onion
ReplyDelete