யானையின் உடலை கண்டுபிடிப்பதற்காக, பொலிஸ் குழு ஒ
குருநாகல் கல்கமுவ பகுதியில் கடந்த 22ஆம் திகதி இளைஞர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட யானைத் தந்தங்கள் இரண்டும் அரியவகை யானையுடையது என தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் யானையை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட யானைத் தந்தங்கள் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.
குறித்த யானையின் உடலை கண்டுபிடிப்பதற்காக பொலிஸ் குழு ஒன்றை நியமிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி யானைத் தந்தங்கள் இரண்டுடன் பொல்பிதிகம பகுதியில் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
வடமேல் மாகாண வனஜீவராசிகள் வலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் சிலர் யானையை தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment