முஸ்லிம் ஆசிரியைகள், அபாயா அணிந்துவர தடை
திருகோணமலை நகரிலுள்ள சில பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வரக்கூடாதென தடை விதிக்கப்பட்டுள்ளதாக திரு கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற திருகோண மலை மாவட்ட ஒருங்கி ணைப்புக் குழுக் கூட்டத் திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. இங்கு கலாசாரத்துக்கேற்ற உடை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு மாற்றமாக திருகோணமலை நகரிலுள்ள சில பாடசாலை களில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முஸ்லிம் பாட சாலைகளில் யாரும் அவர்களுடைய கலாசார தோற்றம் மற்றும் உடைகளோடு பணியாற்ற முடியும்.
அதற்கு எவ்வித தடையுமில்லை. இந்த நிலை எங்கும் காணப்பட வேண்டும். இது சாத்திய மில்லை என்றால் முஸ்லிம் ஆசிரியைகளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு நியமியுங்கள் என்று அவர்கூறினார்.
இங்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ். அபேகுணவர்தன இப்படி யான தடைகள் சட்ட ரீதியாக இல்லை. எனவே இது குறித்து கவனம் செலுத்தப் பட வேண்டும் என்றார்.
இது குறித்து கவனம் செலுத்துவதாக இங்கு சமுகமளித்திருந்த கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவி செயலாளர்தெரிவித்தார்.
இந்த தமிழ் இனவாதிகள் இலங்கையின் மோசமான இனவாதிகள். முஸ்லிம் பாடசாலைகளில் இவர்களின் கலாச்சார ஆடைகளுக்கு தடை போட்டு அனைவரையும் அபாயா அணிந்துவர சொல்ல வேண்டும்
ReplyDelete