வவுனியா பள்ளிவாசல் கடைத்தொகுதியில் தீ - திட்டமிட்ட சதி என குற்றச்சாட்டு
வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது.
வவுனியா நகரபள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் சுமார் 14 கடைகள் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று -20- அதிகாலை திடீரென தீ பரவியதையடுத்து பள்ளிவாசல் ஊடாக தீ அணைப்பு பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும், தீ அணைப்பு பிரிவனரும் பொது மக்களின் உதவியோடு பற்றி எரிந்த தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
பற்றி எரிந்த தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாலும் இரு கடைகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமடைந்துள்ளன.
குறித்த கடைப்பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்தே கடைகள் தீப்பித்து எரிந்ததாகவும், தீப் பிடித்ததும் இருவர் தப்பியோடியதைக் கண்டதாகவும் அப்பகுதியில் பயணித்தோர் தெரிவிக்கின்றனர்.
திட்டமிட்ட ரீதியில் இக் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், விசமிகளின் செயற்பாட்டால் ஒற்றுமையாக வாழும் வவுனியாவில் இனங்களுக்கு இடையில் வன்முறைகளை தூண்டும் வகையில் இச்செயற்பாடு அமைந்துள்ளதாகவும் வவுனியா பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவிக்கின்றது.
சம்பவ இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் வருகை தந்து நிலமையை பார்வையிட்டதுடன் இது தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Post a Comment