கிந்தோட்டையில் முஸ்லிம், கவுன்சில் பிரதிநிதிகள்
கிந்தோட்டைக்கு விஜயமொன்றை மேற்கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் கிந்தோட்டை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய நிறைவேற்றுக் குழுவினருடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடலை நடத்தியுள்ளனர்.
முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் எம்.எம்.அமீன் தலைமையில் கடந்த சனியன்று முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் கிந்தோட்டையில் கள விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
கிந்தோட்டை அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்துடனான கலந்துரையாடலில் பதிக்கப்பட்டடோர் விபரம், நட்டஈட்டை பெறுவதற்கான வழிகள், சட்ட ஆலோசனைகள் குறித்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் சட்டத்தரணிகள் குழுவொன்றையும் கிந்தோட்டைக்கு அனுப்பி இலவச சட்ட ஆலோசனை வழங்குவதற்கான ஏற்ாடுகளை முஸ்லிம் கவுன்ஸில் மேற்கொண்டுள்ளது.
முஸ்லிம் கவுன்ஸில் சேதங்கள் மற்றும் நட்டஈடு பெறுவது தொடர்பாக உள்நாட்டு அலுல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவை தெளிவுபடுத்தவுள்ளதோடு, முஸ்லிம்களால் 10 வீடுகள் அளவிலேயே சேதப்படுத்தப்பட்டுள்ள உண்மையையும் தெரிவிக்கவுள்ளது. ஏற்கனவே முஸ்லிம்கள் 37 வீடுகளுக்கு சேதம் விளைவித்ததாக அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதது குறிப்பிடத்தக்கது.
விஜயத்தில் முஸ்லிம் கவுன்ஸிலின் பிரதித் தலைவர் ஹில்மி அஹமத் மற்றும் செயற்குழு உறுப்பினர் அக்ரம் முக்தார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
கிந்தோட்டை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடனான கலந்துரையாடலில் எம்.கே.எம்.ரஸ்மி, மௌலவி ஜே.எம்.ஹிபஷி, ஷெய்க் பாஸி, எம்.ஆர்.எம்.ஸரூக், எம்.ஜே.எம்.சுஹைல், எம்.என்.எம்.ரமீஸ் மற்றும் ஏ.ஆர் பகுர்தீன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.
ReplyDelete(அல்குர்ஆன் : 2:195)
good handle
ReplyDelete