ஜிந்தோட்ட வன்முறை, நாம் தொடர்பில்லை - பொதுபல சேனா
காலி கிந்தொட்ட பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இனக்கலவரம் தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரரினால் அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், அவரின் பெயரில் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தளங்களூடாக அவருடைய பெயரைப் பயன்படுத்தி ஊடக பிரசாரங்கள் வெளியிடப்படுவதாகவும் பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நன்கு ஆராய்ந்து இக் கலவரத்தில் சொத்துக்களை இழந்தவர்களுக்கும் விஷேடமாக காயமடைந்தவர்களுக்கும் உரிய நஷ்டஈட்டினை ப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு சமூகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்த அனைவரும் உடன்பட வேண்டும் என சம்பவ இடத்துக்கு விஜயம் செய்த ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கின்தொட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிங்கள இனத்தவருக்கும் முஸ்லிம் இனத்தவருக்கும் இடம்பெற்ற பிரச்சினையே இவ்வாறு இனக்கலவரமாக தோற்றம் பெற்றுள்ளது இப்பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம். நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக இது தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் பிரதேசங்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.
இவ்வாறான ஆபத்தை தடுப்பதற்காகவும் எதிர்வரும் வருடங்களில் நாட்டை அபிவிருத்தி அடையச் செய்வதற்காகவும் தமிழ், இஸ்லாம் மற்றும் பௌத்த இன மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
BBS and the so called Buddhist Monk and our Asath Sally's friend Gnanasera.....has done enough damaged to Islam and Muslims in Sri Lanka.Now he is pretending to be another Mr.Clean Guy...by these gimmicks.....pls be vigilant....never ever trust the venomous serpents....
ReplyDelete