மாணவர்களுக்கு புதிய, பேக் அறிமுகம், - முதுகு வளைவு நோயை தடுக்கவும் திட்டம்
பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படும் முதுகு வளைவு நோயைத் தடுப்பதற்காக புதிய பாடசாலை புத்தகப் பை ஒன்றை அடுத்த வருடம் முதல் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் கொண்டு செல்லும் பைகளில் அதிகம் பாரம் காரணமாக அதிகமான மாணவர்களின் இந்த நோய் ஏற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாகவே விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைக்கமைய இந்தப் புதிய பாடசாலை பைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தப் முதுகு வளைவு நோய் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற நடைபவனியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Post a Comment