காவிமயமாகும் இலங்கை அரசியல், இரத்தம் பார்க்கத் துடிக்கிறது
-முபாரிஸ் ஜே.எம்-
படைப்பாற்றல் என்பதை மனிதனுக்கு புறம்பான ஒரு சக்தியாக அல்லாமல் படைப்புக்களிடமிருந்து புலப்படும் ஆற்றலாக எதிர்பார்க்கும் சமூகங்களில் மார்க்கப் போதகர்களின் கைகளுக்கு இறைவனின் இடம் சென்றுவிடுகின்றது. அந்த சமூகங்களில் மார்கப் போதகர்கள் மனிதர்களாக அல்லாமல் புனிதர்களாக நோக்கப்படுகிறார்கள். அவர்களது புனிதத்துவம் ஆட்சிபீடங்களையும் மிஞ்சிவிடுகிறது. இப்படியான சமூகங்களில் மார்க்கப் போதகர்கள் ஆட்சிபீடங்களில் தமது புனிதத்துவ அந்தஸ்து குறைவதை உணர்கின்றபோதெல்லாம் தமது புனிதத்துவத்திற்குக் கீழ்படிந்த அரசாங்கங்களை உருவாக்கிக்கொள்ள பலமாகக் குரல் கொடுக்கின்றார்கள். அல்லது தமே அரசாங்கமாக, தீர்மாணிக்கும் சாக்தியாக மாறிவிட வேண்டும் என எத்தனிக்கிறார்கள். தமது புனிதத்துவ அந்தஸ்துக்களை தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ளவே அவர்கள் இவ்வாறான முயற்சிகளைச் செய்கிறார்கள்.
செல்வம், கௌரவம், அங்கீகாரம், தீர்மானிக்கும் சக்தி என்று மனிதன் எதிர்பார்க்கும் எல்லாவிதமான வரப்பிரசாதங்களையும் இந்தப் புனிதத்துவம் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதால் அவர்கள் அந்தத் புனிதத்துவ அந்தஸ்த்தை இழந்துவிடாமல் இருக்க எல்லா முயற்சிகளையும் செய்கிறார்கள். அவர்கள் இவ்வாறாக தமது புனிதத்துவத்தை பாதுகாக்கும் முயற்சிக்கு மதம் என்ற ஆன்மீகக் காரணியைப் பயண்படுத்தி சமூகத்தில் ஏனைய சாமான்ய மக்களையும் இலகுவாக இணைத்துக்கொள்கிறார்கள். இந்த முயற்சிகளே ஒரு நாட்டில் அல்லது சமூகத்தில் மதவாத அரசியலை உருவாக்கிவிடுகிறது. இந்த சமூகங்களில் தெய்வீக அந்தஸ்து மனிதர்களிடம் சென்றுவிடுவதால் மனித உணர்வுளும் தெய்வீகத்தன்மையோடு கலந்துவிடுகிறது. இவ்வாறு மனித உணர்வுகள் கலந்த மனிதனே மதினை ஆளும் மாசுபட்ட தெய்வீகத்தன்மை. பல விபரீதங்களைத் தோற்றுவிக்கிறது.
இதற்கு வரலாற்றிலும் சம காலத்திலும் பல உதாரணங்களை நாம் பார்க்கலாம் நாம் இலங்கை பற்றிப் பேசுவதால் எமக்கு நெருக்கமான உதாரணமாக மியன்மார் நாட்டை எடுத்துக்கொள்ளலாம் மியன்மார் நாட்டின் பௌத்த மதவாத அரசியல் ஏனையை அனைத்து மதத்தவர்களையும் கொன்று குவிப்பதை நாம் கண் ஊடாகக் காண்கிறோம். வரலாற்றில் மத்திய கால ஜரோப்பாவை எடுத்துக்கொண்டால் அங்கும் இதே மதவாதம் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக இவ்வாறு மர்க்கப் போதகர்களுக்கு இறைவனின் அந்தஸ்தைக் கொடுக்கின்ற சமூகங்களில் மதப் போதகர்கள் தாமே அரசாங்கங்களைக் கொண்டு நடத்துவதை விட தமக்குக் கீழ், தமது புனிதத்துவ அந்தஸ்திற்குக் கீழ் அரசாங்கங்கள் இருக்க வேண்டும் என்றே எதிர்பார்ப்பார்கள். அதுவே அவர்கள் எந்தவிதமான முயற்சிகளும் இல்லாமல் சிம்மாசனங்களில் இருந்துகொண்டு ராஜபோக வாழ்க்கை வாழ்வதற்கு இலகுவான வழிமுறை ஆனால் மத்திய கால ஜரோப்பாவைப் பொருத்தவரை ஒரு வித்தியாசம் இருப்பதை நான் காண்கிறேன். அதாவது அங்கு கிறிஸ்தவ மார்க்கப் போதகர்கள் தமக்குக் கீழ் அரசாங்கம் என்றல்லாமல் தமே அரசாங்கம் ஆக வேண்டும் என்று முனைந்தார்கள். அதுவே உலக வரலாற்றில் மதவாதத்தால் ஏற்பட்ட மிகப் பெரிய அழிவை ஜரோப்பாவில் ஏற்படுத்தியது. எப்படியானலும் இவ்வாறு மாதவாத அரசியல் என்பது மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதற்கு வரலாற்றிலும் சமகாலத்திலும் இவ்வாறான நிறைய சான்றுகள் இருக்கிறது.
இவ்வாறிருக்க அன்மை காலமாக இலங்கையிலும் பெளத்த மதவாதம் மேலோங்கியிருப்பதை காண முடிகிறது. நாட்டில் எல்லா இடங்களிலும் பிக்குகளை முன்னிருத்தி காரியம் சாதித்துக்கொள்ளும் கலாசாரம் அதிகரித்திருக்கிறது. யாப்பு சீர்திருத்தம் தொட்டு தெருச் சன்டை வரை பிக்குகளால் வழி நடத்தப்படுகிறது. பிக்குகளுக்குப் புனிதத்துவ அங்கீகாரத்தைக் கொடுப்பதால் பிக்குகளுக்கு எதிராக நீதியை நிலை நாட்ட அரசாங்கமும் தயங்குகிறது. இவ்வாறு பிக்குகளுக்கு எதிராக நீதியை நிலை நாட்டுமிடத்து தமது அதிகாரம் கை நழுவிச் சென்றுவிடும் என்று அரசாங்கமும் தயங்குகிறது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பிக்குகள் எதிர்பார்க்கும் எந்த விடயமும் அல்லது பிக்குகளை முன் நிருத்தி எந்த விடயமும் அரங்கேர வாய்ப்புப் பிறந்திருக்கிறது. மகா நாயக்க தேரர்களின் சிறிய ஒரு வார்த்தைக்கும் நாடு முழுவதும் துலங்குவதைக் காண முடிகிறது.
அத்தோடு இவ்வாறான மதவாத அரசியல் என்பது இலங்கைக்குப் புதிதான ஒன்றல்ல "அனகாரிக தர்பமால" என்ற காவித் தீவிரவாதியின் செயன்முறைகள் தொட்டுத் துவங்கிய இந்த மதவாத அரசியல் இலங்கையில் பல அழிவுகளையும் பார்திருக்கிறது. அன்மை காலமாக மீண்டும் வியாபித்திருக்கும் இந்த மதவாத அரசியல் பௌத்தர்களைத் தவிற நாட்டில் வாழும் ஏனைய அனைத்து சமூகங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தவல்லது. இந்த விடயங்களை முன் அறிந்து சிறுபான்மை சமூகங்கள் தந்திரோபாயங்களைக் கையாள்வதோடு முன் ஆயத்தமான அரசியல் செயன்முறைகளை கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.
ஆயினும் சிறுபான்மை அரசியல்வாதிகளும் இந்த விடயத்தை உணராமல் அவர்களும் மாதவாதத்தையும், பிரதேசவாதத்தையும் கைகளில் எடுத்துக்கொண்டு முட்டாள்தனமாக இந்தக் காவித் தீவிரவாதிகளின் மத வெறிக்கு தீணி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் துர்ப்பாக்கி நிலை எதிர்காலத்தில் காவி மயமாக்கி இந்தக் குட்டித் தீவை இரத்தமயமாக்குமோ? என்று சிந்திக்கத் தூண்டுகிறது
நாட்டில் எல்லாம் பிரஜைகளும் இந்த விடயங்களை முன் உணர்ந்து சிந்தித்து செயற்படுவோமாக
Post a Comment