முஸ்லிம்களின் பூர்வீகம், தமிழர்களின் வரலாற்றினைவிட பழமைவாய்ந்தது
வடமாகணத்தில் அரங்கேறிய எழுக தமிழ் நிகழ்வில் வடக்கோடு கிழக்கை இணைத்தே தீரவேண்டும் என்ற நாழிலிருந்து இன்றுவரையான கோசங்களுக்கு C V விக்னேஸ்வரன் கூறிய வரலாற்றை இன்னுமொருமுறை அவர் திரும்பி பார்க்க வேண்டும்.
தமிழர்கள் எவ்வாறு வந்தேறுகுடிகள் இல்லாமல் இலங்கையின் பூர்வீகக் குடிகளில் ஒரு அங்கத்தவர் என்று நீங்கள் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதேவேளை முஸ்லிம்களும் இந்நாட்டின் பூர்வீகமக்கள் என்பதனை வடக்கு முதலமைச்சர் வரலாற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
முதலமைச்சரின் உரையில் தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பதனை சிங்கள சமூகம் நிருபித்தால் வடகிழக்கு இணைப்பை நான் கைவிடுகிறேன் என அன்று அறைகூவல் விடுத்தார், இதன்மூலம் கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு சொந்தமானது என்றும் வந்தேறு குடிகளான முஸ்லிம்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது எனவும் மறைமுகமாக சொல்லி வைத்தார், ஆனால் இன்று அராபியாவிலிருந்து வந்தமுஸ்லிம்கள் வடகிழக்கு இணைப்புக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் எனக்கூறுகிறார்..
வடக்கு முதலமைச்சர் வரலாறு பேசுவதற்கு தகுதியானவரா? என்பது எனது கேள்வியாகும்,
ஏனென்றால் விக்னேஸ்வரனும் அவரைப்போன்று வறலாறுகளை நுனிப்புல் மேய்ந்த ஒருசில தமிழ் தலைமைகளும் முஸ்லிம்கள் தமிழ் பேசுகின்றார்கள், இஸ்லாமிய மதம் கி பி 8ம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கிறது, ஆகவே வர்த்தக நோக்கில்வந்த அரபியர்கள் தமிழ் பெண்களை திருமணம் முடித்ததன் விளைவாக தமிழ் பேசுகின்றார்கள் என்றும் முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் என்றும் எண்ணுகின்றனர், இதுதான் இவர்களது அறியாமையாகும்.
இலங்கையில் சோனகர் சமூகம் என்பது சைவமததுக்கு முந்திய வரலாறுகளை கொண்டுள்ளது என்பதனை வரலாற்று ஆசிரியர்கள் நிருபித்துள்ளார்கள். (சோனகர்கள் மலே, மேமன்,போறா என்று பிரிந்திருப்பதனை தடுப்பதற்கு முஸ்லிம்கள் என்ற சொல்பிரயோகதுக்குள் ஒன்றுசேர்க்கப்பட்டார்கள்) இந்தியாவின் ஒரிசா பகுதிகளில் இருந்து இலங்கைக்குள் வந்த திராவிடர்கள் பாண்டிய மன்னனின் ஆட்சிக்காலத்தில் வரி செலுத்தும் முறை கொண்டுவரப்பட்ட பின்னரே சைவ மதத்தினராக அடையாளம் காணப்பட்டனர்,
ஆகவே சோனகர் சமூகம் சைவ மதத்துக்கும் முந்திய வரலாற்று பூர்வீகத்தைக்கொண்டுள்ளது.
அதேபோன்று சோனகர்கள் தமிழ் பேசுவதற்கு காரணம் தமிழக பகுதிகளில் வாழ்ந்த சோனகர்கள் சங்கிலிய மன்னனின் கொடுங்கோலின் காரணமாக இலங்கைக்குள் (மரைக்கார்களும்,லெப்பைகளும்) குடிபெயர்கின்றபோது இங்குவாழ்ந்த சோனக உறவுகளோடு உரையாற்றுவதற்கான மொழியாக தமிழை மாற்றிக்கொண்டனர். ‘’இவ்விடத்தில் வரலாற்று ஆசிரியர்கள் ஒன்றை குறிப்பிடுகின்றார்கள் வடகிழக்கில் வாழ்ந்த தமிழ் பெண்களை வியாபாரத்துக்காக வந்த அரபியர்கள் திருமணம் முடித்தமையால் அவர்களது சந்ததிகள் தமிழ் பேசுகின்றார்கள் என்று திரிவுபடுத்தி கூற முற்படுகின்றனர், அப்படியானால் வடகிழக்குக்கு வெளியில் வாழுகின்ற 3/2 பங்கு முஸ்லிம் சமூகம் எவ்வாறு தமிழ் பேசக் கற்றுக்கொண்டது’’ எனும் சிந்தனை இவர்களுக்கு எழாதது ஏன்? ஆகவே சோனகர்கள் எல்லோரும் தகவல் பரிமாறும் மொழியாக தமிழை தமிழ் இராஜ்ஜியம் இலங்கைக்குள் உருவாவதற்கு முன்னே பேசுகின்றனர் என்பது புலனாகிறது.
ஆனால் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த சோனகர்கள் அர்வி என்ற மொழியை பாவனையில் கொண்டிருந்ததாகவும் ஒல்லாந்தர் படை எடுப்பின் பின் அர்வி மொழியை அவர்கள் அழித்துவிட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.
இஸ்லாம் மதம் கி பி 8ம் நூற்றாண்டுக்குப்பின்னர் வந்தாலும் சோனகர் சமூகம் சைவ மதத்தை பின்பற்றும் தமிழர்களுக்கு முந்திய வரலாறுகளை கொண்டது என்பதனை இப்போதுள்ள தலைமைகள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
ஏனென்றால்.
இஸ்லாம் மதம் பரவுவதற்கு முன்னால் அரபியர்கள் அரபியர்கள்தான், சீனர்கள் சீனர்கள்தான் ஆனால் அவர்களது மதம் மாறியுள்ளது அந்நிய படைஎடுப்புக்களின்மூலம் மதம் மாற்றமடைந்ததும் நன்னடத்தைகள்மூலம் மதம் மாறிய சந்தர்ப்பங்களும் வரலாறுகளில் அதிகம் காணப்படுகிறது.
உதாரணமாக முக்குவர் குலத்தை சேர்ந்த சமூகத்தினர் அந்நிய படையெடுப்பில் தமது பெண்களை பாதுகாத்து கொடுத்தமையை இட்டும் சோனகர்களின் நன்னடத்தையின் பொருட்டும் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டு முஸ்லிம்களாக மாறிய வரலாறுகள் இன்றும் சான்றாக உள்ளன இம்மக்கள் தற்போது புத்தளப்பகுதிகளில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பாக ஜfனா மாவட்டத்தில் காணப்படும் நெய்னா தீவில் பின்பற்றப்பட்டுவந்த நாகவழிபாடு உலகில் நெய்னா தீவுக்கு அடுத்ததாக இன்னுமொரு நாட்டில்தான் காணப்படுகிறது இந்த வரலாற்றை விக்னேஸ்வரன் தேடி அறிந்தால் சோனகர்கள் யார் என்பதனை உங்களால் அறிந்துகொள்ள முடியும்.
ஆகவே விக்னேஸ்வரன் வரலாறுகளை தெரிந்து கொள்வதன்மூலம் கிழக்கு வடக்கோடு இணைய வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட வேண்டும் என்பதனை எச்சரிக்கையோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.
SM சபீஸ்
இந்த கட்டுரையை வாசித்த பின்பு, விசர் விக்னேஸ்வரன் நாண்டுக்கிட்டு சாகா விட்டால் அது தமிழர்கள் எவ்வளவு மானம் கெட்டவர்கள் என்பதை பறை சாட்டி நிட்கும்.
ReplyDeleteசோனகர் சமூகம் என்பது சைவ சமயத்திற்கு முற்பட்டதா. எந்த வரலாற்று ஆசிரியர்கள் நிரூபித்துள்ளனர் என்று தெரிந்துகொள்ளலாமா ?திரிபு படுத்துவதற்கும் ஓர் சொல்வதற்கும் ஓர் எல்லை வேண்டும்.
ReplyDelete😆😆😆😆
ReplyDeleteபடித்த இனவாதிதான் விக்கி
ReplyDeleteஇவரால் நீதித்துறைக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது... இனவாத கருத்துக்களை கக்கும் இவர் வழங்கிய தீர்ப்பில் எவ்வாறு நீதி இருந்திருக்கும்? இவருடைய பேரப்பிள்ளைகள் எந்த இனம்? இவர்கள் உண்மையான தமிழனாக இருந்தாள் தனது குடும்பத்தினரை இந்துவாக வாழவைக்கட்டும்... சிங்கள அரசுடன் இணைந்து செயற்பட முடியாத இவருக்கு எப்படி தனது பிள்ளையை சிங்களவர்களுடன் வாழ வைக்க முடியும்?
ReplyDeleteWriter please give evidence from where you got this! I want to read it!
ReplyDeleteஇனவாத கட்டுரை
ReplyDeleteதூக்கு போட்டு தற்கொலை செய்ய வேண்டியது இந்த கட்டுரை ஆசிரியர்
ReplyDeleteமுட்டாள் தனமான கட்டுரை
Sonakar is the most ancient race lived in Sri Lanka.
ReplyDeleteWhat is the point in spreading incorrect history information? Nothing can be changed by writing the article with fabricated information like this one.
ReplyDeleteIt is true that Muslim in Srilanka had their own language which is called as Arwi. This language is based on Tamil and Arabic words. Arwi had its own alphabet which is based on Arabic characters. There are also unique letters in Arwi which are not used in Arabic, which were used to write Tamil words with correct pronunciation. In fact, women were still using this language till recently. These all sound like Muslims are not the converted people from the Tamils. They are unique people who settled down in Srilanka and south India, and they had become indigenous people very long before the Portugees came to Srilanka.
Muslim chosen Tamil langue as the source to develop their own language. This gives us an indication that Muslim lived peacefully among Tamils. After the Portuguese arrival, Muslims moved to the central part of the country.
Whatever the history is, we all must find ways to live peacefully integrated with other societies rather than creating the rift.
After the Tamil cause was defeated in war, the majority society feels that they are the only rightful owner of this country. This mindset makes them to act as a bullying power against minorities and to persecute minorities. The ruling power in this country must be divided such a way changing the ruling system as united Sri Lanka so that the majority will not feel that they are the only rightful owner of this island. Tamils and Muslim should work together to find an appropriate solution for a multi-ethnic country for the benefit of all minority and majority communities with help from international community.
இலங்கையில் முஸ்லிம்கள் மாத்திரமே இறந்தவர்களின் உடலைப் புதைக்கும் பழக்கம் உடையவர்கள். நாடெங்கிலும் காணப்படுகின்ற நீளமான கப்றுகள் தற்போதைய முஸ்லிம்களின் கப்றுகளை ஒத்திருப்பதோடு இம்முறையை இலங்கை முஸ்லிம்கள் தொடர்ச்சியாக பின்பற்றிவருவதானது அவர்களின் தொன்மையை உறுதிப்படுத்துகின்றது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான ஈமத்தாழிகள் “பொம்பரிப்பில்” கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஈமத்தாழிகள் என்பது இறந்தவர்களை புதைப்பதற்காக புராதன மக்கள் பயன்படுத்திய புதைகுழிகளாகும். “பின்னர் பூமியை தோண்டக் கூடிய ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான்- அவருடைய சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்குகாண்பிப்பதற்காக (அது பூமியில் தோண்டிற்று அதனைப்பார்த்து) என்னுடைய பரிதாபமே! இந்த காக்ததைப் போன்று நான் ஆவதற்கும் என் சகோதரரின் பிரேதத்தை (மண்ணில்) மறைப்பதற்கும் இயலாதவனாகிவிட்டேனே! என்று (பிரலாபித்து) அவர் கூறினார், கைசேதப்படுபவர்களில் ஒருவராக அவர் ஆகிவிட்டார்.-(அல்-குர்ஆன்5:31) இந்த குர்ஆன் வசனமானது முஸ்லிம்கள் இறந்தவர்களை எவ்வாறு அடக்கம் செய்யவேண்டும் (அதாவது இறந்தவர்களின் உடலை மண்ணைத் தோண்டி புதைக்க வேண்டும்) என்பதை உலகின் முதல் மனிதனான ஆதம்(அலை) அவர்களின் மகனுக்கு கற்றுக்கொடுத்ததைக கூறுகின்றது. இதன் மூலம் இலங்கை முஸ்லிம்களின் தொன்மை இன்னும் வலுப்படுத்தப்படுகின்றது
ReplyDeleteஇலங்கையின் வரலாற்றைக் கூறும் மிகமுக்கிய நூலான மகாவம்சம் இலங்கையில் வாழ்ந்த ஆரம்ப சமூகங்களான இயக்கர், நாகர் பற்றிக் குறிப்பிடுகின்றது. இவர்களில் ஒரு பிரிவான நாகர் ஓர் இறைக் கொள்கை(தௌஹீத்) உடையவர்களாக வாழ்ந்துள்ளார்கள். இவர்கள் முஸ்லிம்கள் என்பதை ஏ.பி.எம். இத்ரீஸ்(நளீமி) அவர்கள் தனது சோனக தேசம் பற்றிய குறிப்புக்களில் நிறுவுகின்றார்.
ReplyDeleteஇந்த நாகருக்கு இலங்கையில் கரையோரப்பகுதியிலும், உள்நாட்டிலும் நாவாய்கள் இருந்ததாக பேராசிரியர் கணபதி பிள்ளை கூறுகின்றார். அந்தவகையில் தமிழ் நாட்டின் அரசாங்கத்தின் கீழ்நாட்டு பழஞ்சுவடி நூல் நிலையம் ஒன்றில் வடமொழியில் நௌகா சாஸ்திரம் என்றதொரு கப்பல் நூல் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கப்பலை தமிழ் நாவாய் என்கிறது. அதேவேலை ஹிந்தி, உருது, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் கப்பலை நாவ் என்கிறது. ஆங்கிலம் கப்பல் படையை நேவி என்கிறது. இதில் தமிழ் மொழி மட்டுமே நாவாய் என்பதை அயல் மொழி என்று கூறாது சொந்தம் கொண்டாடுகிறது. நாவாய் என்பதற்கும் நோவா (நூஹ்நபி) என்பதற்கும் தொடர்பு இருக்கின்றது. நோவா or நூஹ்(அலை) அவர்களே உலகில் முதன் முதலாக பெரிய கப்பலை or நாவாய் கட்டியவர் அவர் பெயரிலிருந்தே கப்பலுக்கு பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். எனவேதான் இலங்கையில் வாழ்ந்த நாகர் நூஹ்(அலை) அவர்களின் வழித்தோன்றல்களான முஸ்லிம்களாக இருக்கவேண்டும். இவ்வாறு நபி ஆதம்(அலை) அவர்களின் பத்து தலைமுறையினர் இலங்கையிலும், இந்தியாவிலும், அழிந்துபோன குமரிக்கண்டத்திலும் வாழ்ந்திருப்பதற்கான சான்றுகள் உள்ளன.(A.B.M.இத்ரீஸ்)
“ஆரியர்கள் இலங்கைக்கு வருகைதருகின்ற, போதிருந்த வேடுவர்களுடன் சேர்ந்திருந்த வரலாற்றை உடையவர்களே அரபிகள். இவர்கள் இலங்கையின் ஆதிக்குடிகள்” என சுவடித் திணைக்கள ஆணையாளர் கலாநிதி பாலேந்திரா குறிப்பிடுகிறார்.
இலங்கையின் வரலாற்றைக் கூறும் தொன்மை நூலான மகாவம்சம் மூதாதயரை (பண்டைய முஸ்லிம்களை) “யோனர்” என்று குறிப்பிடுவதுடன் பண்டுகாபய மன்னன்(கி.மு. 377-307) அநுராதபுர நகரத்தை அமைத்தபோது அதன் மேற்குப்புற வாசலருகே யோனர்களுக்கு நிலத்தை ஒதுக்கினார் எனவும் குறிப்பிடுகின்றது-(மகாவம்சம் அத்தியாயம் X பகுதி9- கெய்கர் மொழி பெயர்ப்பு பக்கம்74)
அதேவேலை இலங்கையின் புராதன சிங்களக் காவியங்களிலும் “யோனக” என்றபதம் கையாளப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கி.மு 377இல் (பண்டுகாபயன் மன்னன் காலம் கி.மு377–307) தலைநகர் அநுராதபுரத்தில் அரேபியருக்கென தனியான வீடுகள் காணப்பட்டன - (அந்திரியஸ் நெல்)
கிரேக்க தளபதியான “ஒனாசிக் கிரீட்டஸ் ”கி.மு 327இல் வரையப்பட்ட பூகோளப்படத்தில் மன்னார், புத்தளம் பகுதிகளில் அரபுக் குடியிருப்புக்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
The History of Commerce in Indian என்ற நூலில் பேராசிரியர் சிறி கந்தையா “நபியவர்கள் வேதத்தை அறிமுகம் செய்ய முன்னர் மிக நீண்ட காலத்திற்கு முன்பே இந்தியாவின் மேற்குப்பகுதிக்கும் அரபுநாடுகளுக்கும் இடையிலான வியாபாரத் தொடர்புகள் விரிந்தளவில் இடம் பெற்றன” என்கிறார்.
கிறிஸ்தவ ஆண்டு தொடங்க முன்னரே அரேபியர் இலங்கையில் குடிகளாக வாழ்ந்தனர்.-(பிளினி)
Source : meesanway.blogspot.com