இஸ்ரேலிய கொடியை காண்பிப்பது குற்றச் செயலாகும் - பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்
பொது இடத்தில் இஸ்ரேலிய கொடியை காண்பிப்பதை குற்றச்செயலாக்கும் சட்டம் ஒன்று ஈராக் பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈராக்கின் குர்திஷ் பிராந்தியத்தில் செப்டெம்பர் 25 ஆம் திகதி நடந்த சுதந்திர வாக்கெடுப்புக்கு பின்னர் அங்கு இடம்பெற்ற பல பேரணிகளிலும், இஸ்ரேலிய கொடி அசைக்கப்பட்டதை அடுத்தே பாராளுமன்றத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தை மீறுவோருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று ஈராக் பாராளுமன்ற உறுப்பினரான அல் பயாதி குறிப்பிட்டுள்ளார்.
ஈராக்கில் இருந்து குர்திஷ் பிராந்தியம் தனிநாடாக பிரிவதற்கு இஸ்ரேல் மாத்திரமே வெளிப்படையாக ஆதரவை வெளியிட்டது. இந்த ஆதரவை பல குர்திஷ்களும் வரவேற்றனர். இஸ்ரேலுடன் ஈராக் எந்த ஒரு இராஜதந்திர உறவையும் பேணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Yahoodyplan succeed.
ReplyDeleteWe are fighting each others
We followed yahoodi
ReplyDeleteBut we burn yahoodi flag
What a joke is it????
கொடியை பொது இடங்களில் காண்பிப்பது தான் குற்றம் என்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கிடையில் உள்ள ரகசிய உறவு வெளிப்பட்டு விடக் கூடாது என்பதற்காக தான்.
ReplyDeleteகள்ளத்தெடர்புகளை முஸ்லீம்உம்மத் முற்றாக கைவிடாத வரை ஈடேற்றமில்லை
ReplyDelete