Header Ads



முஸ்லிம்களின் சிந்தனைக்கு...!


-சட்டத்தரணி YLS ஹமீட்-

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட கிந்தோட்டை, காலி மாவட்டத்தில் இருக்கின்றது. அங்கு எங்களுக்கு ஒரு மாகாணசபை உறுப்பினரும் கிடையாது.

காலி மாவட்டம் தென்மாகாண சபையில் இருக்கின்றது. அதில் மொத்தம் மூன்று மாவட்டங்கள். அவை: காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை. எதிலும் ஒரு மாகாணசபை உறுப்பினர் இல்லை.

கிந்தோட்டை முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்தவர்கள் மத்திய முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள்.

பாதுகாப்பு அளித்தது, மத்திய விசேட அதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையினர்.

ஏதோ அழுத்கமை சம்பவமளவு மோசமாகாமல் அல்லாஹ் பாதுகாத்தான். அல்ஹம்துலில்லாஹ்.

பொலிஸ் அதிகாரம் உட்பட, அதிகப்பட்ச அதிகாரத்துடன் சமஷ்டி முறையின் கீழான புதிய மாகாணசபை உருவானால்?

மத்திய முஸ்லிம் அமைச்சர்களின் வார்த்தைகள் அங்கு எடுபாடாது!

ஜனாதிபதியோ, பிரதமரோ தலையிட முடியாது!!

மத்திய அரசபடைகள் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட முடியாது!!!

முதலமைச்சரின் கீழுள்ள பொலிஸ்தான் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

புதிய தேர்தல் திருத்தத்தின் கீழ் கிழக்கிற்கு வெளியே இப்பொழுது ஓரளவு பிரதிநிதித்துவம் இருக்கின்ற மாகாணங்களிலேயே ஒன்றில் பிரதிநிதித்துவம் இல்லாமலாகப் போகின்றது அல்லது மிகவும் குறைவடையப் போகின்றது.

இந்நிலையில் இவ்வாறு கிந்தோட்டைகளும், அழுத்கமைளும் எதிர்காலத்தில் உருவானால் நமது நிலை என்ன?

எத்தனை பேர் சிந்தித்திருக்கின்றோம்?

சிந்திப்போமா?

சிந்திக்கத் தயாரா?

அல்லது தேர்தல் சீர்திருத்தத்திற்கெதிராக அவர்கள் கைஉயர்த்தியபோது இருவாரங்கள் முகநூல்களில் முகாரிராகம் பாடிவிட்டு ஓய்ந்ததுபோல்!!!!

இதற்கும் இரண்டு வாரங்கள் முகாரிராகம் பாடிவிட்டு ஓய்ந்துவிடுவோமா?

சிந்தியுங்கள்!!!!


7 comments:

  1. சேர்,இதைத்தான் நாங்களும் சொல்லுக்குவது ஏன் எங்கட முஸ்லிம் காட்சிகள் அரசியல்வாதிகள் ஒன்றுபடக்கூடாது.
    ஏன் ஒரு கூட்டணியாக மறுகிறார்களில்லை,எங்களது பலம் கூட்டணியில்தான் இருக்கிறது. இது எங்கட அரசியல் பேய்களுக்கு விளங்குதில்லையா?

    ReplyDelete
  2. சேர்,இதைத்தான் நாங்களும் சொல்லுக்குவது ஏன் எங்கட முஸ்லிம் காட்சிகள் அரசியல்வாதிகள் ஒன்றுபடக்கூடாது.
    ஏன் ஒரு கூட்டணியாக மாறுகிறார்களில்லை,எங்களது பலம் கூட்டணியில்தான் இருக்கிறது. இது எங்கட அரசியல் பேய்களுக்கு விளங்குதில்லையா?

    ReplyDelete
  3. Our unity can stop all recism matter.
    Also we can be success with imaan and unity

    ReplyDelete
  4. kick off this politics bloodies lets start new generation

    ReplyDelete
  5. உபதேசம் நன்றாகத்தான் உள்ளது.. ஆனால் உங்களை போன்றவர்கள் அனைவரும்..." உன்னைக்கில்லடி உபதேசம் ஊருக்கடி" என்பது தான் யதார்த்தம்.

    ReplyDelete
  6. Mr. Nebosh you r correct we have to think about it.

    ReplyDelete
  7. வார்வுரிமை மாநாடு இதற்குத்மான்

    ReplyDelete

Powered by Blogger.