Header Ads



பெற்றோல் பெற காத்துநின்றவர், திடீரென மரணம்

இலங்கையில் கடந்த வாரம் நிலவிய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் இடம்பெறுள்ளது.

மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்ள வந்த நபர் ஒருவர் மாரடைப்பில் நேற்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான ஜயந்த பிரேமலால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கரந்தெனிய உத்துராமகலை பொது மாயானத்தின் கண்கானிப்பாளராக செயற்பட்டு வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோல் பெற்றுக் கொள்ளவந்து நீண்ட நேரம் வரிசை காத்திருந்தவருக்கு இறுதியில் பெற்றோல் கிடைக்கவில்லை என ஏமாற்றமடைந்துள்ளார்.

பின்னர் பெற்றோல் நிலைய ஊழியர்களிடம் சண்டையிட ஆரம்பித்தவர், திடீரென்று தரையில் விழுந்துள்ளார்.

உரகஸ்மன்ஹந்திய மருத்துவமனையில் சில ஆரம்ப மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்ட பின்னர் அவர் எல்பிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பின் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.