"முஸ்லிம் விரோதப் போக்கு, ஓர் கறுப்பு ஜூலையை நோக்கி.." விக்டர் ஐவன்
காலி கிங்தோட்டையில் இனக் கலவரமொன்று ஏற்படுவதற்கு காரணமாய் அமையக்கூடிய நிகழ்வுகள் மேலும் பரவுவதற்கு இடமளிக்காது கட்டுப்படுத்திக் கொள்ள முடிந்தாலும், தொடர்ந்தும் சிங்கள முஸ்லிம் மக்களுக்கிடையிலான இனத் தொடர்பு எந்த நேரத்திலும் பற்றியெரியக்கூடிய நிலைமையிலேயே காணப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தினை சிங்கள இனவாதத்திற்கு அதிக ஆதரவு வழங்கும் ஓர் அரசாங்கம் எனக் கருத முடியாவிடினும், சிங்கள அடிப்படைவாத அமைப்புக்களுக்கு முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெறுப்பையும் குரோதத்தையும் விதைப்பதற்கு இடமளித்து விட்டுப் பார்த்துக் கொண்டிருக்கும் கோழைத்தனமான ஓர் அரசாங்கம் எனக் கருத முடியும்.
எந்தவொரு பண்பார்ந்த நாட்டிலும் அந்த நாட்டில் வாழும் ஓர் இனத்திற்கு எதிராக வாய் மூலமாகவோ, அச்சு ஊடகங்கள் மூலமாகவோ இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாகவோ வெறுப்பை அல்லது வெறுப்புணர்ச்சியைப் பரப்பும் நிகழ்ச்சிகளுக்கு இடமளிப்பதில்லை. ஆனால் இலங்கையில் அமுலில் காணப்படும் கொள்கை அதற்கு முற்றிலும் மாறுபட்டது. தீ வைப்பதை மாத்திரமே இலங்கை குற்றமாகக் கருதுகிறது. பெற்றோல் ஊற்றுவதைக் குற்றமாகக் கருதுவதில்லை.
எல்ரீரீஈக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தம் முடிவடையும் வரை சிங்கள அடிப்படைவாத அமைப்புக்கள் முஸ்லிம் மக்கள் மீது வெளித் தோற்றத்தில் பொங்கி வழியும் அன்பினை வெளிப்படுத்தின. அவர்கள் மிகவும் அன்புடன் கொண்டாடிய யுத்த வீரர்களின் பெயர்ப் பட்டியலில் பல முஸ்லிம் இராணுவ வீரர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. உள்நாட்டு யுத்தம் முடிவுறுத்தப்பட்ட பின்பு சிங்கள் அடிப்படைவாத அமைப்புக்கள் தமிழ் மக்களுக்கு எதிராக கொண்டு சென்ற பிரச்சார நிகழ்ச்சித்திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி விட்டு முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டுவதற்கு காரணமாய் அமையும் பிரச்சார நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பித்தன. முஸ்லிம்கள் சிங்களவர்களின் சனத்தொகையைக் குறைப்பதற்காக சிங்களவர்கள் சாப்பிடும் உணவுகளுக்கும், அணியும் ஆடைகளுக்கும் அவ்வாறு குறைக்கும் மருந்துகளை இடும் ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் வேலைத்திட்டத்தை மேற்கொள்கிறார்கள் என்ற கருத்தினை சமூகமயப்படுத்தும் ஓர் வேலைத்திட்டத்தினை அவை மேற்கொண்டன. ராஜபக்ஷ ஆட்சியின் சில தலைவர்களும் அந்த முஸ்லிம் விரோத நிகழ்;ச்சித்திட்டத்திற்கு உதவும் கொள்கையைப் பின்பற்றினர். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்பு அந்த முஸ்லிம் விரோதக் கொள்கையைப் பின்பற்றாவிடினும், அந்த முஸ்லிம் விரோத பிரச்சார வேலைத்திட்டத்திற்கு இடமளித்து விட்டுப் பார்த்துக் கொண்டிருக்கும் கொள்கையைக் கடைபிடித்தது.
தற்போது நாடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாதத் தீயொன்று பற்றியெரிய முடியுமான துரதிஷ்டவசமான, பயங்கர நிலையிலேயே காணப்படுகிறது. நாட்டில் முஸ்லிம் மக்கள் சந்தேகத்துடனும் அச்சத்துடனும் வாழ வேண்டியேற்பட்டுள்ளது. இதற்கு முன்பு தமிழ் மக்கள் தொடர்பாகவும் இதனை ஒத்த வகையிலேயே நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழ் மக்களுக்கு எதிராக வெறுப்பும் குரோதமும் ஏற்படுவதற்கு காரணமாய் அமையும் வகையில் கொண்டு செல்லப்பட்ட பிரச்சார நிகழ்ச்சித்திட்டங்கள் பாரிய அழிவினை ஏற்படுத்திய 83 கறுப்பு ஜூலையில் போய் முடிந்தது. தற்போது நாடு மீண்டும் அந்த இடத்திற்குப் பயணிக்கிறதா?
சிங்கள அடிப்படைவாத அமைப்புக்கள் அறிந்தோ அறியாமலோ நாட்டை பாரிய அழிவை நோக்கி வழிநடாத்திக் கொண்டிருக்கின்றன. ஓர் அழிவு ஏற்படின் அது முஸ்லிம் மக்களுக்கு மாத்;திரமன்றி சிங்கள மக்களுக்கும் பாரிய அழிவினை ஏற்படுத்துவதைத் தடுக்க முடியாது. 83 கறுப்பு ஜூலை நாட்டிற்கு ஏற்படுத்திய அழிவு பாரியது. அது நீண்டகாலத்தில் நாட்டை சீரழிந்த நிலைமைக்கு உட்படுத்தியது. இரத்த சமுத்திரத்தில் மிதக்கும் நாடாக மாற்றியது. தற்போது நாடு மீண்டும் அவ்வாறானதோர் பயங்கர, மிலேச்சத்தனமான நிலைக்குச் செல்ல முயற்சிக்கிறதா? நாட்டில் இனங்களுக்கிடையிலான தொடர்பை இவ்வாறான சிக்கலான நிலையில் வைத்துக்கொண்டு அரசியலமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பாக பேசிக் கொண்டிருப்பதைப் போன்ற நகைச்சுவைக்கிடமான வேறு எதுவுமில்லை. பூர்த்தி செய்யப்பட வேண்டிய முன் நிபந்தனைகளைப் பூர்த்திய செய்யாமலேயே அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க முயற்சிக்கிறது.
நன்றி – ராவய (2017.11.26)
சிங்களத்தில் - விக்டர் ஐவன்
தமிழில் - அபூபத்ஹான், ஹேனேகெதர
Well said.
ReplyDeleteNow it's the time to take precautions for not happening the bad reality again in our country.
Fist of all we have to establish Neighborhood watch , like in U.K. I can't explain details in this regard. Always we can get more information in online.
- we need to establish village guards. For this every one take turn in protecting our towns and villages in unexpected circumstances.
- we need involved Police and People in this regard.
- also we should arrange a public meeting with police and government AGA divisional personal, religious personals and people etc to initiate the program and discuss the matter. How to form a Neighbor hood watch.
These some of my thinking after listening to BBC program, Regarding the Rohinghya Geniside. It is exactly the same way , recent incident happened in Ginthita.
- neighboring village people at takes the Rohingya, same way Gingrhota attaked by Neighbors. In my view it will be more catastrophic in future if that happens.