Header Ads



"இஸ்லாமிய வங்கி முறையை, அரசு அனுமதிக்காது"

இஸ்லாமிய ஷரிஅத் சட்டங்களின் அடிப்படையில் வட்டி கொடுக்கல் - வாங்கல் இல்லாத வங்கிகள் உலகின் சில நாடுகளில் இயங்கி வருகின்றன. தொழில் கடன் மற்றும் குறுகியகால கடனாக அளிக்கப்படும் தொகைக்கும் இவ்வங்கிகள் வட்டி வசூலிப்பது இல்லை.

இந்நிலையில், ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத் நகருக்கு வந்திருந்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி இன்று பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். 

தற்போது நாட்டில் அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள் இயங்கி வருகின்றன. இந்த வங்கிமுறை அனைத்து மக்களுக்கும் பொதுவான சேவையாக இருந்து வருகிறது. இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்துக்கு உட்பட்ட இஸ்லாமிய (வட்டி இல்லாத) வங்கி முறையை நாட்டில் அறிமுகப்படுத்த வேண்டும் என சில அமைப்புகள் யோசனை தெரிவித்துள்ளன. ஆனால், அப்படி ஒரு எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதால்  இஸ்லாமிய வங்கி முறையை இந்த அரசு அனுமதிக்காது என முக்தார் அப்பாஸ் நக்வி குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.
    (அல்குர்ஆன் : 42:13)

    ReplyDelete

Powered by Blogger.