ஓரினச்சேர்க்கையை இவ்வரசு கொண்டுவர சிந்திக்கும் போது, முஸ்லிம்கள் எதிர்ப்பு காட்டாதிருப்பது சிறந்தல்ல
முஸ்லிம் தனியார் சட்ட மாற்றத்தை முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடிப்படையிலேயே ஏற்றுக்கொள்ளும் வகையிலான நியாயங்கள் உள்ள போதும் அதனை மாற்ற வேண்டாம் என கூறும் முஸ்லிம்கள், இஸ்லாத்துக்கு பூரண ஓரினச்சேர்க்கை இவ்வரசு கொண்டுவர சிந்திக்கும் போது எந்த எதிர்ப்பையும் வெளிக்காட்டாதிருப்பது சிறந்ததல்ல.
தற்போதைய அரசாங்கமானது மதம், கலிச்சாரம் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்குகின்ற ஒரு அரசல்ல. இது மேற்கத்திய சாயலை அதிகம் பின்பற்றுபவர்களை கொண்ட அரசு. இன்று இலங்கை நாட்டில் ஐ.நா சபையின் அழுத்தத்தின் பெயரில் ஓரினச்சேர்க்கையை சட்டமாக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றது.இது நடைபெற்றால் இலங்கை நாட்டின் கலாச்சாரம் கேள்விக்குட்படுத்தப்படும். இது இஸ்லாமிய கலாச்சாரம் உட்பட அனைத்து கலாச்சாரத்தையும் பாதிக்கும்.
முஸ்லிம்கள் முஸ்லிம் தனியார் சட்ட மாற்ற விடயத்தில் கவனமாக இருப்பதை போன்று இவ்விடயத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பதன் காரணம் புரியவில்லை. முஸ்லிம் தனியார் சட்ட மாற்றத்தில் இஸ்லாத்தில் குறிப்பிடப்படாத சீதனம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நோக்கினால் அதன் மாற்றம் அவசியமானதெனலாம். ஆனால், ஓரினச்சேர்க்கை போன்ற செயற்பாடுகள் இஸ்லாத்தின் படி பாரதூரமான குற்றமாகும். முஸ்லிம்கள் நம்பும் லூத் நபியினுடைய சமூகம் இக் குற்றத்துக்காகவே அழிக்கப்பட்டது. இப்படி இஸ்லாம் கூறிக்கொண்டிருக்கையில் முஸ்லிம்கள் பராமுகமாக இருக்க முடியாது.
இது அனைவரையும் பாதிக்கும் ஒரு விடயம் என்பதால் முஸ்லிம்கள் அமைதியாக இருக்கின்றார்களோ தெரியவில்லை. எது எப்படியோ அது முஸ்லிம்களையும் பாதிக்கும். இந்த விடயங்களை இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிகொள்ள வேண்டும்.எமது நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாத்து தூய்மையான இலங்கையை எமது சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அ அஹமட்,
ஊடக செயலாளர்,
முஸ்லிம் முற்போக்கு முன்னனி.
We have many unsolved issue. Are you trying to put Muslims also in this problem...
ReplyDeleteWhy don't we consider this is a muslims issue? We have to encourage when one who do good; it is a sign of Belief (Eemaan).
Deleteமேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்?”
ReplyDelete(அல்குர்ஆன் : 7:80)
அதற்கவர், “இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 15:71)
(நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.
(அல்குர்ஆன் : 15:72)
ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது.
(அல்குர்ஆன் : 15:73)
பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம்.
(அல்குர்ஆன் : 15:74)
நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 15:75)
www.tamililquran.com