பிஸ்கட் கம்பனிகளினால், விழுங்கப்படும் தேங்காய்கள்
நாட்டில் பிஸ்கட் வகைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பாரியளவில் தேங்காய்களை கொள்வனவு செய்வதே நாட்டில் தேங்காய் பற்றாக்குறை நிலவ பிரதான காரணம் என தெங்கு உற் பத்தியாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பாரிய நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் உடனடி தேங்காய் பால்மாவை பாவனையாளர்கள் கொள்வனவு செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பாவனைக்கான தெங்கு நாட்டில் உற்பத்தி செய்யப்படினும், அண்மைக்காலமாக திறந்த பொருளா தார கொள்கையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட நிறைய பிஸ்கட் தொழிற்சாலைகள், பாரியளவில் தேங்காய்களை கொள்வனவு செய்கின்றமையே நாட்டில் தேங்காய் பற்றாக்குறை நிலவக்காரணம் எனவும் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, தேசிய தெங்கு உற்பத்தி சபையின் ஊடாக நகரும் லொறி மூலம் தேங்காய் ஒன்று 65 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment